அஜீத்தைக் கடும் கோபத்துக்கு ஆளாக்கிய இயக்குனர்... டுவிஸ்ட் வைத்த தயாரிப்பாளர்

by sankaran v |
அஜீத்தைக் கடும் கோபத்துக்கு ஆளாக்கிய இயக்குனர்... டுவிஸ்ட் வைத்த தயாரிப்பாளர்
X

ஆஸ்கர் மூவீஸ் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு அஜீத் குறித்தும் அவரது கோபம் பற்றியும் தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இதுபற்றிய விவரம் வருமாறு.

அஜீத் அந்த பிரபல இயக்குனரோட பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்க ஒரு ஹோட்டலுக்கு வர்றாரு. அப்போ அங்கு பல பிரபலங்களும் வந்துருக்காங்க. அங்கே உள்ளவங்க கிட்ட அந்த இயக்குனர் பிசியா பேசிக்கிட்டு இருந்துருக்காரு. அப்போ அஜீத் சார் அங்கு வந்து அந்த இயக்குனரோட அசிஸ்டண்டுக்கிட்ட நான் வந்துருக்கேன்னு சொல்லுன்னு சொல்றாரு.

அப்போ அவரு உள்ளே போய் சொல்லிட்டு வந்துடறாரு. ஆனா ரொம்ப நேரம் உட்கார்ந்து பார்த்த அஜீத் திரும்பவும் அந்த அசிஸ்டண்டு கிட்ட சொல்லி விடுறாரு. ஏற்கனவே நீங்க வந்ததை சொல்லிட்டேன் என்றவர் மீண்டும் அஜீத் சொன்னதற்காக இயக்குனரின் அறைக்கதவை திறந்து சொல்லிட்டு வர்றாரு. வந்ததும் அஜீத்திடம் சென்று சார் இப்ப கொஞ்சம் பிசியா இருக்காரு. இன்னொரு நாள் உங்களை சந்திப்பாராம்னு சொல்லிடறாரு.

அதைக் கேட்டதும் அவரோட முக ரியாக்சனே மாறிடுது. அஜீத்துக்கு முகத்துல அவ்ளோ கோபம் இருந்ததை நான் அன்னைக்குத் தான் பார்த்தேன். நானே மிரண்டுட்டேன். அப்போ ஒரே ஒரு வார்த்தை தான் சொன்னாரு. அவரு அந்தக் கோபத்தைப் பக்குவமா தான் வெளிக்காட்டுனாரு. 'ஒன் டே வில் கம்'னு சொல்லிட்டுப் போயிடறாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அந்த டைரக்டர் அஜீத் சார் பெரிய ஆளா ஆனதுக்குப் பிறகு பல தடவை அவருக்கிட்ட வந்து வாய்ப்புகள் கேட்குறாரு. ஆனா அவரைப் பக்கத்துலயே அஜீத் சார் நெருங்க விடல. அஜீத் சாருடன் வேலை பார்க்குறவங்களுக்கு எல்லாம் வீடு கட்டிக் கொடுத்துருக்காரு. அவர் சொல்ல வேண்டிய கருத்தைத் தைரியமாகச் சொல்பவர். அவருக்கு தல தலன்னு பட்டத்தை வேணாம்னு இன்னைக்கும் ஒதுங்கி இருக்காரு.

அந்த வகையில அந்த இயக்குனர் யாரு என்பதை பேட்டியின் கடைசியில் ஒரு க்ளூ கொடுத்து தயாரிப்பாளர் பாலாஜி பிரபு சொல்லி முடிக்கிறார். அவர் டேம் பேர்ல படம் எடுத்த ஒரு டைரக்டர் என்று சொல்கிறார். அவர் சொல்வதை வைத்துப் பார்க்கும் போது அமராவதி படம் என்று தெரிகிறது.

அமராவதி என்பது ஒரு அணையின் பெயர் தான். அந்தப் படத்தை இயக்கியவர் செல்வா. அந்தப் படத்தில் அஜீத்துக்கு சங்கவி ஜோடியாக நடித்தார். கல்யாண் குமார், கவிதா, நாசர், சார்லி, தலைவாசல் விஜய் உள்பட பலரும் நடித்துள்ளனர். ஜீத் கதாநாயகனாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. 1993ல் வெளியானது.

Next Story