ரஜினி நடிச்ச அந்த பாம்பு காமெடி... உருவானதன் சுவாரசிய பின்னணி!

அண்ணாமலை படத்தில் ரஜினி, பாம்பு காமெடி ரொம்ப அசத்தலாக இருக்கும். யாருமே அதை எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். லேடீஸ் ஹாஸ்டல்ல பாம்பு. பால்காரர் ரஜினி வருகிறார். அவர் பயந்தபடி கெத்து காட்டுவார். 'ஒண்ணும் இல்ல. பாம்பு நம்மளக் கடிச்சிடுமோன்னு பயம். பாம்புக்கு நம்மளைக் கண்டு பயம் என்றபடி நாகராஜா பொண்ணுங்க முன்னாடி மானத்தை வாங்கிடாதப்பா உனக்கு 100 முறை பாலாபிஷேகம் பண்றேன்.
கண்ணை மூடிக் கண்ணைத் திறக்குதுக்குள்ள போயிருப்பா'ன்னு சொல்லி அதகளமாகக் காமெடி பண்ணுவார். இந்தக் காட்சி எப்படி உருவானது என்பதை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா சுவாரசியமாக சொல்கிறார். வாங்க பார்க்கலாம். அப்போ எல்லாம் இந்த அனிமலைத் துன்புறுத்தக்கூடாதுன்னு சொல்ற ரூல்ஸ் இல்ல.
பாம்புடன் ரஜினி: பாம்பு சீன் எடுத்தா அதோட பல்லைத் தைச்சிடுவாங்க. பாம்பை வச்சிட்டு படம் எடுக்க முடிவு பண்ணிட்டோம். பாம்பு வந்து சூட்டிங்கிற்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காது. அதை விட்டுட்டா அது பாட்டுக்குப் போய்க்கிட்டு இருக்கும். ரஜினி சாருக்கு எங்கே போகுதுன்னு சொல்லத் தெரியாது. பாம்பை அவருக்கிட்ட விட்டாச்சு. யாருமே அசையக்கூடாது. சத்தம் போடக்கூடாது. பாம்பை டிஸ்டர்ப் பண்ணக்கூடாது. ரஜினிசாரே அசைந்து பயப்படக் கூடாது.
ரிஸ்கியான மேட்டர்: அவரு உடம்பு கொஞ்சம் அசைஞ்சா கூட அது வேற மாதிரி போயிடும். உடம்பு முழுவதும் அது ஊர்ந்து போகுது. பயத்துல சிரிக்கிறாரு அவரு. 'நச்'சுன்னு படம் எடுத்துது அது அந்த சீன்ல. படம் எடுத்ததுக்குப் பிறகு தான் ஹைலைட். அது ரொம்ப ரிஸ்கியான மேட்டர். பாம்புகாரனுக்கும், மேனேஜருக்கும் வெளியில சண்டை நடக்குது. முடிஞ்சிப் போச்சே.
வாயைத் தைக்கலை: என்னத்துக்கு பாம்புக்காரனுக்கு காசைக் கொடுக்க வேண்டியதுதானேன்னு நினைச்சேன். அந்த ஆளு பாம்பு வாயைத் தைக்கலையாம். அப்புறம்தான் ரஜினி சாருக்கே அது தெரிஞ்சுதாம். 'ஆ... முடிஞ்சுப்போச்சு... வேணாண்டா... இதெல்லாம். டேய் விளையாடாதடா'ன்னாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.