சூட்டிங்ஸ்பாட்டில் கவுண்டமணி காலில் விழுந்த விஜய் அப்பா… அட இதெல்லாமா நடந்தது?

Published on: August 8, 2025
---Advertisement---

கவுண்டமணி, விஜய் அப்பா எஸ்ஏசி குறித்து ஒரு ஆச்சரியமான தகவலை பகிர்ந்துள்ளார் சினிமா விமர்சகரும், தயாரிப்பாளருமான பாலாஜி பிரபு. என்ன சொல்றாருன்னு பாருங்க.

கவுண்டமணி செந்திலை அடிப்பதும், திட்டுவதும் அப்போது ரசிகர்களை குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்தது. விஷ்ணு படத்தின்போது செந்தில் மூணாறுல சூட்டிங் நடந்தது. அங்கே செந்தில் நடிச்சிக்கிட்டு இருந்தாரு. அப்போ ஒரு சின்ன வதந்தி பரவியது. அதாவது கவுண்டமணி காலமாகிட்டாரு. அது வேகமா பரவுது. அப்போ செந்தில் சூட்டிங்ஸ்பாட்ல பிரேக்ல சாப்பிட்டுக்கிட்டு இருந்தாரு.

இந்தத் தகவல் செந்திலுக்கு வந்து சேர அவரு பதறிப்போய் கையைக்கூட கழுவல. அப்போ செல்போன் கிடையாது. இந்தத் தகவல் உண்மையா இல்லையான்னு போன் பண்ணிக் கேட்டாரு. அதுக்கு அப்புறம் அது வதந்தின்னு தெரிஞ்சதும்தான் இயல்பா படத்துல நடித்தார்.

கமல் இவ்ளோ பெரிய உயரத்துக்கு வந்தால் கூட கவுண்டமணி கமலைக் கலாய்ப்பார். அந்தக்கால நட்பின் அடிப்படையில் அப்படி பேசினார். அதனால கமலே அவரைப் பார்த்துப் பயப்படுவாராம். கார்த்திக் படத்துக்கு லேட்டா வருவாரு. அவரையும் கவுண்டமணி நேருக்கு நேரா திட்டுவாரு.

ரசிகன் படத்தில விஜய் நடிச்சாரு. கவுண்டமணிக்கு தொழில் மேல பக்தி. அதனால சீக்கிரம் வந்துட்டாரு. அன்னைக்கு பார்த்து எஸ்ஏசி. காலைல ஏழரை மணிக்கு லேட்டா வந்துட்டாரு. அதனால கார்ல இருந்து இறங்கினதும் ஓடிப்போய் கவுண்டமணி காலில் விழுந்து 4 தடவை மன்னிப்பு கேட்டாரு. கவுண்டமணியும் விடுங்க விடுங்க.

இது எப்பவாவது நடக்குறதுதான்னு நடிச்சிக் கொடுத்தாராம். அந்தளவு கவுண்டமணி சின்சியாரிட்டியான ஆள் என்கிறார் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு. விஜய் நடித்த ரசிகன் படம் 1994ல் வெளியானது. படத்தின் இயக்குனர் விஜயின் அப்பா எஸ்ஏ.சந்திரசேகர் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தில் சங்கவி தான் விஜய்க்கு ஜோடி. கவர்ச்சி மழையில் நம்மை நனைத்து விடுவார். விசித்ரா, ஸ்ரீவித்யா, மனோரமா, விஜயகுமார், கவுண்டமணி, செந்தில் உள்பட பலர் நடித்துள்ளனர். தேவா இசை அமைத்துள்ளார். பாடல்களில் பம்பாய் சிட்டி என்ற பாடலை விஜய் சித்ராவுடன் இணைந்து பாடியுள்ளார். இது குத்துப்பாடல். அந்தக் காலத்தில் விஜய் தான் நடிக்கும் படங்களில் ஒரு பாடலாவது பாடி விடுவார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment