ஆடியோ விழாவுக்கு கேட்டை இழுத்து மூடிய ஸ்டேடியம்! விஜய்னா நோ.. இது என்னப்பா புது பிரச்சினையா இருக்கு?

Published on: September 13, 2023
leo
---Advertisement---

Leo audio launch: பீஸ்ட் படத்திற்கு பிறகு விஜயின் நடிப்பில் அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் லியோ. இந்தப் படத்தை லோகேஷ் இயக்க விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா இந்தப் படத்தில் நடிக்கிறார். விஜயுடன் சேர்ந்து அர்ஜூன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான் போன்ற மல்டி நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.

படத்திற்கு இசை அனிருத். முதல் சிங்கில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பையும் சமூக ஆர்வலர்களிடம் வெறுப்பையும் சம்பாதித்தது. படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி படம் திரைக்கு வரவிருக்கிறது.

இதையும் படிங்க: விஜய் படம் வரப்போகுது… ரஜினி படம் தொடங்கப்போகுது… லோகேஷ் பாய் இப்போ இதெல்லாம் தேவையா?

இந்த நிலையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை சென்னையில் நடத்த திட்டமிட்டிருக்கின்றனர். முதலில் வெளி நாடுகளில் நடத்தலாம் என்று பேசிக் கொண்டிருந்த நிலையில் இப்போது வழக்கம் போல சென்னையில் தான் நடக்க இருக்கிறது.

பெரிய பெரிய நடிகர்களின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் இருக்கும் நேரு ஸ்டேடியத்தில் தான் நடைபெறும். மாவீரன், மாமன்னன் போன்ற படங்களின் விழாவும் நேரு ஸ்டேடியத்தில் தான் நடைபெற்றது.

இதையும் படிங்க: குடும்பத்துடன் சேர பிக்பாஸ் வைத்து ப்ளான் போடும் வனிதா… ஏலேய் முடில விட்றங்கம்மா… கதறிய ரசிகர்கள்

ஆனால் விஜயின் லியோ படத்திற்கு மட்டும் இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லையாம். இதற்கு பின்னாடி அரசியல் சார்ந்த ஒரு விளையாட்டு கூட இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே விஜயும் அரசியலுக்குள்  குதிக்க இருக்கிறார்.

அதனால் இதில் ஏதாவது உள்குத்து கண்டிப்பாக இருக்கும் என்று கூறுகிறார்கள். அதனால் ஆடியோ வெளியீட்டு விழாவை ஆதித்ய ராம் பிலிம் சிட்டியில் நடத்தலாமா என்று பேசி வருகிறார்களாம்.

இதையும் படிங்க: ஓவர் சீன் போடும் வேலராமமூர்த்தி… ஆதி குணசேகரனுக்கு வேறு நடிகரை தேடும் சீரியல் குழு… செட்டாகுமா?