தீபாவளிக்கு வெளியான ஒரே ஹீரோவின் 4 படங்கள்!.. எல்லாமே கிளாசிக் ஹிட்ஸ்!..
இப்போது போல் இல்லை. 1960 முதல் 2000 வரை வருடத்திற்கு அதிக படங்கள் ரிலீஸ் ஆகும். ஒரு வருடத்தில் ஒரே ஹீரோவின் படங்கள் 10க்கும் மேல் வெளியாகும். மைக் மோகன் என அழைக்கப்படும் நடிகர் மோகனின் நடிப்பில் இரு வருடம் 13 படங்கள் வெளியாகியது. சில சமயம் ஒரே நேரத்தில் இவரின் இரண்டு படங்கள் வெளியாகி ஒன்றோடு ஒன்று போட்டி போடும். அதேபோல், விஜயகாந்த், சத்தியராஜ் ஆகியோருக்கும் நடந்துள்ளது. சில நடிகர்களுக்கு 10 நாள் இடைவெளிகளில் கூட அவர்களின் அடுத்த படம் வெளியானதுண்டு.
இந்நிலையில், ஒரு தீபாவளியன்று ஒரு நடிகரின் நான்கு திரைப்படங்கள் ஒன்றாக வெளியான நிகழ்வு பற்றித்தான் இங்கே பார்க்க போகிறோம். அப்படி படங்கள் வெளியான நடிகர் வேறு யாருமல்ல. கலைஞானி கமல்ஹாசன்தான் அந்த நடிகர்.
முதலில் பார்க்கபோகிற திரைப்படம் ‘மனிதரில் இத்தனை நிறங்களா’. 1978ம் வருடம் அக்டோபர் 29ம் தேதி இப்படம் வெளியானது. ஆர்.சி.சக்தி இயக்கியிருந்த இந்த படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, மனோராமா, சுருளிராஜன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு சியாம் என்பவர் இசையமைத்திருந்தார்.
அடுத்து அவள் அப்படித்தான். இப்படம் அடுத்த நாள் அதாவது அக்டோபர் 30ம் தேதி வெளியானது. ருத்ரையா இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் கமல்ஹாசன், ரஜினி, ஸ்ரீபிரியா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படம் வசூலை பெறவில்லை என்றாலும் இப்போது வரை இப்படம் தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த படமாக கருதப்படுகிறது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
அடுத்து பாரதிராஜா இயக்கத்தில் வந்த சிகப்பு ரோஜாக்கள். இப்படத்தில் கமல்ஹாசன் ஒரு சைக்கோ கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஸ்ரீதேவி கமலுக்கு ஜோடியாக நடித்திருப்பார். இந்த படமும் தீபாவளியை குறி வைத்து அதே அக்டோபர் மாதமே வெளியாகியிருந்தது. இந்த படத்திற்கும் இளையராஜாவே இசையமைத்திருந்தார். அத்தனை பாடல்களுக்கும் சூப்பர் ஹிட் ஆனது. குறிப்பாக ‘நினைவோ ஒரு பறவை’ என்கிற பாடல் சூப்பர் மெலடியாக அமைந்தது. வெறும் 20 நாட்களில் எடுக்கப்பட்ட இந்த படத்திற்கான பின்னணி இசையை ஒன்றரை நாளில் முடித்து கொடுத்தார் இளையராஜா. அந்த வருட தீபாவளி ரேஸில் இந்த படம்தான் அதிக வசூலை பெற்றது.
அதே அக்டோபர் மாதம் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தப்பு தாளங்கள். ரஜினி, சரிதா முக்கிய வேடத்தில் நடிக்க கமல்ஹாசன் ஒரு காட்சியில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். இந்த படமும் நல்ல வசூலை பெற்றது.
இதையும் படிங்க: நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினரா கூப்பிட்டா அங்க போயும் பிரச்சனையா?!. அடங்காத மாரிமுத்து!..