Cinema History
விஜயின் அந்த சூப்பர்ஹிட் காட்சியை எடுக்கும் போது இது இல்லை… பிரண்ட்ஸ் படத்தின் உண்மை…
Friends: தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது பிரண்ட்ஸ். இப்படத்தில் இருந்த ஒரு காட்சி படமாக்கும் போது நடந்த விஷயங்களை மதன் பாப் கூறி இருப்பது ஆச்சரியத்தினை ஏற்படுத்தி இருக்கிறது.
இயக்குனர் சித்திக் இயக்கத்தில் அப்பச்சன் தயாரித்த திரைப்படம் பிரண்ட்ஸ். இப்படத்தில் விஜய், சூர்யா, தேவயானி, விஜயலட்சுமி, வடிவேலு, ராதாரவி, மதன் பாப், ரமேஷ் கண்ணா, சார்லி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். நேருக்கு நேர் படத்தினை தொடர்ந்து சூர்யாவும், விஜயும் இணைந்து நடித்த திரைப்படம் பிரண்ட்ஸ்.
இதையும் படிங்க: சிவாஜியின் நடிப்பு இப்படித்தான் இருக்கும்!.. இளம் நடிகர்கள் சொல்வது என்ன தெரியுமா?…
மலையாளத்தில் ரிலீஸாகி ஹிட்டடித்த பிரண்ட்ஸ் படத்தினை அதே பெயரில், அதே கதையில் கோலிவுட்டில் சித்திக்கே இயக்கி இருந்தார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து இருந்தார். இப்படம் தியேட்டரில் ரிலீஸாக மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக அமைந்தது. கிட்டத்தட்ட175 நாட்கள் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது.
இப்படத்தின் வெற்றிக்கு விஜய், சூர்யாவை விட வடிவேலுவின் நேசமணி கேரக்டர் முக்கிய காரணம் என்றே கூற வேண்டும். இரண்டாம் பாதியில் இருந்து இப்படத்தில் அவரின் காமெடிகளுக்கு பஞ்சமே இருக்காது. சிரிச்சு வயிறு வலித்தவர்கள் தான் அதிகம். இன்றளவும் சமூக வலைத்தள ட்ரெண்ட்டிங்கில் இருக்கிறது.
இதையும் படிங்க: ஹீரோக்களை நம்பாத இயக்குனர்கள் இங்கதான் இருக்காங்க!.. சும்மா பேசாதீங்க!.. சீறும் லிங்குசாமி!…
ஆனால் பிரண்ட்ஸ் படத்தில் எண்ணெயில் வடிவேலு வழுக்கி விழுவது உண்மை தான். அவர் விழுந்து தான் நடித்தார். அதுப்போல சிலர் காமெடி காட்சிகளை அசால்ட்டாக எடுப்பார்கள். ஆனால் சித்திக் அதை சரியாக செய்வார். நான் உதைத்து வடிவேலு ட்ரமில் விழுவார். நான் அவரை மிதிக்கவில்லை.
என் கால் வேறு ஒருவர் மீதே பட்டது. அப்போ ராதாரவி இல்லை. அந்த காட்சியில் எல்லாருக்கும் தனிதனியாக காட்சிகள் இருந்தது. ஆனால் அதை சரியாக எடுத்து இணைத்ததாலேயே அக்காட்சி ஹிட்டானது. இந்த ஷூட்டிங்கில் வடிவேலுவுக்கு அடிப்பட்டது. அதை தன்னுடைய ஸ்டைலாக மாற்றி வடிவேலுவின் வின்னர் படத்திலும் நடித்திருப்பார் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: காலங்காலமாக இந்த நடிகருக்கு நன்றிக்கடன் பட்டவன் நான்! யாரை சொன்னார் தெரியுமா வடிவேலு?