
latest news
கயாடு லோஹர்லாம் கணக்குலயே இல்லை!.. விஜய், சூர்யா, தனுஷ், விஷ்ணு விஷால் கண்ணெல்லாம் இவங்க மேலதான்!..
டிராகன் படம் மூலம் டிரெண்டான கயாடு லோஹரை இயக்குநர்கள் அடுத்தடுத்த படங்களில் புக் செய்து பிஸியாக்க போகிறார்கள் என நினைத்திருந்த ரசிகர்களுக்கு ஷாக் தரும்படியாக பிரேமலு படத்தின் மூலம் பிரபலமான மமிதா பைஜூவை பல படங்களில் புக் செய்துள்ளனர்.
மளையாளத்தில் தொடர்ந்து பல படங்கள் ஹிட் அடித்து வருகிறது. அங்கிருந்து நடிகைகள் தமிழ் சினிமாவுக்கு இறக்குமதியாகி வருகின்றனர். அந்த வரிசையில் பிரேமலு படத்தில் நடித்திருந்த மமிதா பைஜூ தமிழில் அறிமுகமான படம் ரெபல். அந்த படத்தில் ஜி.வி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால், முதல் படம் அவருக்கு பெரிய சொதப்பல் படமாக மாறியது. அதற்கு முக்கிய காரணம் யாரென்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.
தளபதி விஜயின் கடைசி படமான ஜனநாயகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் மமிதா பைஜுவுக்கு கோலிவுட்டில் மார்க்கெட் உச்சத்துக்கு சென்றுவிட்டது. விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் இரண்டு வானம் படத்திலும் இவர்தான் ஹீரோயின்.
அதை தொடர்ந்து முன்னணி நடிகர்களான தனுஷ் மற்றும் சூர்யாவின் பார்வையும் இவர் மீதுதான் விழுந்திருப்பதாக கூறுகின்றனர். அடுத்தடுத்து தனுஷ் மற்றும் சூர்யா படங்களிலும் இவர் கமீட்டாகியுள்ளார். மமிதா வணங்கான் படத்திலேயே சூர்யாவுடன் நடிக்கவிருந்தது. ஆனால், சூர்யா அப்படத்தை விட்டு விலகியவுடன் இவரும் விலகி விட்டார். தற்போது வெங்கி அட்லுரி இயக்கத்தில் மறுபடியும் இருவரும் இணைந்து நடிக்க உள்ளனர்.
நடிகர் தனுஷ் தற்போது இட்லி கடை படத்தை நடித்தும் இயக்கியும் வருகிறார். அதை தொடர்ந்து குபேரா மற்றும் தேரே இஷ்க் மெயின் படங்களை முடித்துவிட்டு போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜாவின் இயக்கத்தில் நடிக்கும் படத்தில் மமிதா பைஜூவுடன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பல ரசிகர்களின் மனதை கவர்ந்த கயாடு லோஹரை விட்விட்டு மமிதா பைஜூவை பல படங்களில் ஒப்பந்தம் செய்துள்ளது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அதர்வா, சிம்பு என கயாடு லோஹர் நடித்து வந்தாலும் பெரிய ஹீரோக்களின் பார்வை மமிதா பைஜு மீதுதான்.