ஆல் ஏரியாவிலும் அண்ணன் தான் கில்லி!.. 70ஸ் டூ 2கே குட்டீஸ் வரை கலக்கிய கங்கை அமரன்

by sankaran v |   ( Updated:2024-04-28 06:23:17  )
Gangai Amaran
X

Gangai Amaran

கங்கை அமரன் நாம் கொண்டாடப்பட வேண்டியவர். ஆனால் தவறி விட்டோம். அவர் இயக்குனர் மட்டுமல்ல. திறமையான இசை அமைப்பாளர், பாடலாசிரியரும் கூட. அது மட்டுமல்லாமல் இவர் படங்கள் இயக்கினார் என்றால் அங்கு கதாசிரியர், பாடகர், பின்னணி குரல், நடிப்பு என பல திறமைகளையும் அசால்டாகக் காட்டிவிடுவார். இசைஞானி இளையராஜாவின் தம்பி. இவரைப் பற்றி நாம் அறியாத தகவல்கள் நிறைய உள்ளன.

1977ல் வெளியான 16 வயதினிலே படத்தில் வெளியான செந்தூரப்பூவே பாடல், அஜீத்தின் மங்காத்தா படத்தில் வரும் விளையாடு மங்காத்தா பாடலின் ஆசிரியரும் இவர் தான்.

80ஸ் ஹிட் அடித்த கோழி கூவுது படத்தின் இயக்குனர் இவர் தான். அதே போல 90ஸ்சில் மெகா ஹிட்டான கரகாட்டக்காரன் படத்தின் இயக்குனரும் இவர் தான். 70களின் கடைசியில் தான் இவர் பாடல் எழுதத் தொடங்கினார். அவை எல்லாம் இப்போது கேட்டாலும் உங்களை கவர்;ந்து இழுத்து விடும்.

பூவரசம் பூ பூத்தாச்சி, நித்தம் நித்தம் நெல்லுச்சோறு, உறவுகள் தொடர்கதை, வெத்தல வெத்தல வெத்தலயோ, பூங்கதவே தாழ் திறவாய், என் இனிய பொன் நிலாவே ஆகிய பாடல்கள் இவரது கைவண்ணத்தில் உருவானவை தான். அது மட்டுமா, ஆசைய காத்துல தூதுவிட்டு, காற்றில் எந்தன் கீதம், சிறு பொன்மணி அசையும், புத்தம் புது காலை, இன்றைக்கு ஏன் இந்த, போவோமா ஊர் கோலம் ஆகிய பாடல்கள் எல்லாம் இவர் எழுதியதா என்று நம்மை வியக்க வைக்கும்.

Karakattakkaran

Karakattakkaran

ராமராஜனின் கரகாட்டக்காரன், விஜயகாந்தின் அம்மன் கோவில் கிழக்காலே படங்களில் எல்லாம் எல்லாப் பாடல்களையும் எழுதியவர் இவர் தான். அதுமட்டும் தானா என்றால் இல்லை. 2கே கிட்ஸ்களுக்கும் பிடிக்கும் வகையில் கோவா படத்தில் இதுவரை இல்லாத, சென்னை 28 படத்தில் சரோஜா சாமா நிக்காலோ ஆகிய சூப்பர்ஹிட் பாடல்களையும் இவர் தான் எழுதியுள்ளார். அதே போல இசையில் என்றால் இவரது முதல் படம் 1979ல் வெளியான ஒரு விடுகதை ஒரு தொடர்கதை. 75 படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

எங்க ஊரு ராசாத்தி படத்திற்கு இவர் தான் இசை அமைத்துள்ளார். இதில் வரும் பொன்மானைத் தேடி பாடல் இன்று கேட்டாலும் ரம்மியமாக இருக்கும். எங்க ஊரு பாட்டுக்காரன், வில்லுப்பாட்டுக்காரன், செண்பகமே செண்பகமே, கோயில் காளை, கும்பக்கரை தங்கய்யா என 10 படங்களை இயக்கியுள்ளார். எல்லாமே ஹிட் ரகங்கள் தான்.

அதே போல் பாக்கியராஜின் ஆரம்ப கால படங்களில் இவர் டப்பிங் கொடுத்துள்ள்ளார். பூஜைக்கேத்த பூவிது பாடலைப் பாடியவர் இவர் தான். இவரது வாரிசுகளான வெங்கட்பிரபு, பிரேம்ஜி இப்போது பல படங்களில் தம்; திறமையைக் காட்டி வருகின்றனர்.

Next Story