இப்படி இருக்கிறதுக்கு சன்னியாசியா போயிரனும்! இருந்தும் வேஸ்ட்.. இளையராஜா பற்றி பொங்கி எழுந்த கங்கை அமரன்
Ilaiyaraja Gangai Amaran: தமிழ் சினிமாவில் இசையில் பெரும் சாதனை படைத்தவர் இளையராஜா என அனைவருக்கும் தெரியும். இசைஞானி என அனைவராலும் போற்றப்படும் இளையராஜா கிட்டத்தட்ட 50 ஆண்டுகளை கடந்தும் தன் இசையால் இன்னும் ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார். பல படங்களின் வெற்றிக்கு இவரது இசையும் காரணமாக அமைந்திருக்கிறது.
கடைசியாக விடுதலை படத்தில் இசையமைத்த இளையராஜாவின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றது. எவ்வளவுதான் சாதனைக்கு சொந்தக்காரராக இருந்தாலும் நிஜவாழ்க்கையில் மற்றவர்கள் மதிக்கும் படி வாழ்கிறாரா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இளையராஜாவின் மேல் பயம் என்று சொல்லலாம். ஆனால் அவர் மீது மரியாதை என்று சொல்லமுடியாது.
இதையும் படிங்க: ஒரு நாள்ல என்னய்யா எடுக்க போறீங்க? பின்னாளில் ஹிட்டடித்த அந்த சீன்.. விஜய்க்காக இறங்கி வந்த நடிகர்
அந்தளவுக்குத்தான் மற்றவர்களை தள்ளி வைத்து பார்ப்பவர் இளையராஜா. தான் என்ற அகங்காரம் மிக்கவர். பல பிரபலங்கள் மறைமுகமாக இளையராஜாவை பற்றி வருத்தப்பட்டதும் உண்டு. இதற்கிடையில் கங்கை அமரன் சமீபத்தில் இளையராஜாவை பற்றி சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். சில நாள்கள் இளையராஜாவும் கங்கை அமரனும் பேசிக் கொள்ளாமல் தான் இருந்தார்கள்.
இருவருக்குள்ளும் ஏதோ கருத்து வேறு பாடு இருந்து பின் கங்கை அமரன் இளையராஜாவை அவர் வீட்டில் போய் சந்தித்த புகைப்படங்கள் எல்லாம் வெளியானது. அதே போல் இளையராஜாவுடன் இணைந்து பல வெற்றி பாடல்களை கொடுத்தவர் வைரமுத்து. ஆனால் இப்போது வைரமுத்துவும் இளையராஜாவுடன் நட்பில் இல்லை. அவர்களுக்குள்ளும் கருத்து வேறுபாடு.
இதையும் படிங்க: கோபிக்காக துணை நின்ற பிள்ளைகள்… உங்க செண்டிமென்ட்டுக்கு ஒரு அளவே இல்லையா?
இதை குறிப்பிட்டு பேசிய கங்கை அமரன் ‘உறவு என அவர் பக்கத்தில் இப்போது யாருமில்லை. எனக்காவது என் மகன்கள் இருக்கிறார்கள். அவர்கள் புண்ணியத்தில் நான் இன்று நலமாக இருக்கிறேன். ஆனால் இளையராஜா அவர் மகன்களுடன் பேசிக் கொள்வதே இல்லை. பேரன் பேத்திகளோடு பேசுவார். அவ்வளவுதான். இருந்தாலும் அண்ணன்தானே என ஒரு நாள் நானே போன் செய்து நான் எந்த தப்பும் பண்ணல. இருந்தாலும் மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கூறினேன்’ என கங்கை அமரன் கூறினார்.
அதுமட்டுமில்லாமல் அவருக்காக நாங்கள் எல்லாம் இறங்கி வர தயார். ஆனால் அவர் தயாராக இல்லை. இறங்கி வரவும் மாட்டார். யாரும் வேண்டாம் என இருக்கிறார்.இப்படி இருக்கிறதுக்கு பேசாமல் சன்னியாசியாக போய்விடலாமே? ஒன்னும் வேண்டாம். யாரும் வேண்டாம் என்றால் அது தான் வழி என கங்கை அமரன் கூறினார்.
இதையும் படிங்க: இந்த படத்துல நான் நடிக்க மாட்டேன்!.. அடம்பிடித்த கார்த்திக்!.. அட அந்த சூப்பர் ஹிட் படமா!..