கங்குவா ரிலீஸ் தேதி எப்போன்னு தெரியுமா? அடடா சூப்பரான நாளை குறி வச்சிட்டாங்களே..!
கங்குவா படம் வட இந்தியாவில் 3000 ஸ்கிரீன், ஓவர்சீஸ்ல 3000 ஸ்கிரீன், தமிழகத்தில் 2000 ஸ்கிரீன் என 8000 ஸ்கிரீன் டார்கெட்டா வச்சிருக்கோம் என தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார். இந்தப் படம் எப்போ ரிலீஸ் என்பதையும் அந்தப் படம் குறித்தும் பல சிறப்புத் தகவல்களைத் தெரிவித்துள்ளார். என்னன்னு பார்க்கலாமா...
ஒரு படம் இவ்வளவு பெரிய எதிர்பார்ப்புடன் இருக்குன்னா அதுக்கு காரணம் சிவா சார், சூர்யா சார் டீம் தான். ஞானவேல் சார் பேனருக்கு இவ்வளவு பெரிய பேர் வர்றதுக்கு இந்தப் படம் பெரிய சப்போர்ட்டா இருக்கு. அதுல சின்ன ரோல் நம்ம பண்றோம்கற போதே பெரிய சந்தோஷம் தான்.
இந்தப் படத்துக்கான ரிலீஸ் தேதி வெகுவிரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்கள். பல மொழிகள், பல வியாபாரங்கள் இருப்பதால் அதற்கான வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது. புரொமோஷன் பிளான், எல்லோரிடமும் டேட் வாங்கணும், எல்லா மொழிகளிலும் சென்சார் வாங்கணும். 3டி கம்ப்ளீட் பண்ணனும். அப்ரூவல் வாங்கியே ஆகணும். இப்படி பல வேலைகள் நடந்துக்கிட்டு இருக்கு.
சீனியரான ரஜினிக்கு வேட்டையன் படம் அக்டோபர் 10ல் வந்தது. அதனால் கங்குவாவின் ரிலீஸ் தேதியையே தள்ளி வைத்ததாக சூர்யா தெரிவித்து இருந்தது அவர் ரஜினி மீது காட்டிய மரியாதை தெரிகிறது.
அந்த வகையில் முதலில் அக்டோபர் 30ன்னு சொன்ன வேட்டையன் டீம் திடீர்னு 10ம் தேதி என்று அறிவித்தார்கள். அதற்காக நாங்க அதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. கோட் படத்துக்குப் போட்டியே இல்லை. அதனால் மிகப்பெரிய கலெக்ஷன் பண்ணுச்சு. வேட்டையனும் அப்படித்தான். அதனால் சோலோவா வந்தால் படம் நல்லா போகும். அப்படித்தான் கங்குவாவும் இருக்கணும்னு நாங்க நினைச்சோம்.
Also read: ரஜினிகாந்துக்கு மறக்க முடியாத பிறந்தநாள்… அப்போது நடந்த தரமான சம்பவம்
பொங்கலுக்கு 2 பெரிய படங்கள் வருவதில் பிரச்சனை இல்லை. குட்பேட் அக்லி வருது. அதே மாதிரி தக் லைப் வரும்னும் சொல்றாங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அதே நேரம் சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சினிமா பத்திரிகையாளர் அஸ்வின் படம் நவம்பர் 14ல் ரிலீஸ்னும் தெரிவித்துள்ளார். இது குழந்தைகள் தினம். அந்த நாளில் எந்த ஒரு படமும் பெரிய அளவில் போட்டி இல்லை என்பதால் படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு நிலவி உள்ளது. இந்தத் தேதியை அதிகாரப்பூர்வமாக விரைவில் தெரிவிப்பார்கள் என்றே தெரிகிறது.