Categories: latest news

அட!.. தளபதி 69 படத்தை கெளதம் மேனன் இயக்கப் போறாரா?.. அவரே சொன்ன பதிலை பாருங்க!..

வரும் மார்ச் 1ம் தேதி கெளதம் மேனன் இயக்கத்தில் பிக் பாஸ் வருண் நடிப்பில் உருவான ஜோஷ்வா இமை போல் காக்க திரைப்படம் ஒரு வழியாக ரிலீஸ் ஆகிறது. அதுகுறித்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இயக்குநர் கெளதம் மேனன் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

பிக் பாஸ் சீசன் 7 சமீபத்தில் முடிந்த நிலையில், சீசன் 5ல் ராஜு ஜெயமோகன் டைட்டில் வென்ற சீசனில் போட்டியாளராக வருண் கலந்து கொண்டார். அதற்கு முன்பாகவே அவர் நடித்த ஜோஷ்வா திரைப்படம் பல ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் தள்ளிப் போய்க் கொண்டிருந்த நிலையில், ஒரு வழியாக மருமகன் படத்தை ரிலீஸ் செய்ய வேல்ஸ் ஐசரி கணேஷ் மனமிறங்கி வந்திருக்கிறார்.

இதையும் படிங்க: உங்களை டைரக்ட் பண்ணுவேன்னு ஒருநாளும் நினைக்கல சார்!.. தனுஷ் அப்படி யார டைரக்ட் பண்றாரு தெரியுமா?..

இந்த படத்தில் வருணுக்கு ஜோடியாக நடித்த ராஹேய் அந்த படத்தில் மட்டும் நடித்து விட்டு பிக் பாஸ் முதல் சீசன் டைட்டிலை வென்ற ஓவியாவின் எக்ஸ் காதலர் ஆரவ்வை திருமணம் செய்துக் கொண்டு குடும்பத்தை கவனிக்க ஆரம்பித்து விட்டார்.

அஜித்தின் விடாமுயற்சி படத்தில் ஆரவ் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில், பல ஆண்டுகள் கழித்து ஜோஷ்வா படம் ரிலீஸ் ஆக உள்ளது. துருவ நட்சத்திரம் எப்போ ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் ஆர்வமுடன் கேட்டு வருகின்றனர். ஆனால், அதற்கு இன்னும் பிரச்சனை தீரவில்லை. விரைவில் வெளியாகும் என கெளதம் மேனன் பதிலளித்தார்.

இதையும் படிங்க: 300 பேர் முன்னாடி அஜித் என் காலில் விழுந்தார்!.. சொல்லித்தான் ஆகணும்!.. அதிரவிட்ட நடிகர்…

விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேட்டதற்கு நல்ல விஷயம் தான் என்ற கெளதம் மேனன் அவர் இன்னமும் நிறைய படங்கள் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை என்றார். மேலும், தளபதி 69 படத்தை நீங்க இயக்குறீங்களா? என கேட்டதற்கு தெரியாது என பதிலளித்தார். பின்னர் இயக்குவீங்களா? என்கிற கேள்விக்கு அப்படியொரு வாய்ப்பு கிடைத்தால் மிஸ் பண்ண மாட்டேன் என்றார்.

Saranya M

Recent Posts

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

5 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

6 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

13 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

14 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

15 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

1 day ago