Cinema History
ஜெய்சங்கரின் வாய்ப்பை தட்டிப்பறித்த ஜெமினி கணேசன்!.. அட அந்த சூப்பர் ஹிட் படமா?!…
Gemini ganesan: சினிமாவில் வாய்ப்பு என்பதே மிகவும் முக்கியம். ஒரு நடிகரின் திரை வாழ்க்கைக்கு அடிப்படையாக இருப்பதே அவருக்கு கிடைக்கும் வாய்ப்புதான். சரியான வாய்ப்பு இல்லாமல் ஒரு நடிகர் மேலே வரமுடியாது. வாய்ப்பு என்பது சில சமயம் தயாரிப்பாளர்கள் மூலம் வரும். சில சமயம் இயக்குனர்கள் மூலம் வரும்.
சில சமயம் நடிகர்கள் மூலமும் வரும். அல்லது மற்ற நடிகர், தொழில்நுட்ப கலைஞர்கள் என யார் மூலமாவது ஒருவருக்கு வரும். அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டால் மட்டுமே ஒருவர் சினிமாவில் முன்னேற முடியும். இது சினிமாவில் நுழைய ஆசைப்படுபவர்களுக்கு மட்டுமல்ல. ஏற்கனவே சினிமாவில் பெரிய நடிகராக இருப்பவர்களுக்கும் பொருந்தும்.
இதையும் படிங்க: அப்பா எனக்கு என்னவெல்லாம் செய்தார் தெரியுமா?… ஜெமினி கணேசன் பற்றி பேசும் சாவித்ரி மகன்…
ரஜினிக்கு பாலச்சந்தர் கொடுத்த வாய்ப்புதான் அபூர்வ ராகங்கள். கமலுக்கு ஏவிஎம் நிறுவனம் கொடுத்த வாய்ப்புதான் களத்தூர் கண்ணம்மா. லோகேஷ் கனகராஜுக்கு கமல் கொடுத்த வாய்ப்புதான் விக்ரம். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். வாய்ப்பை பெறுவது ஒருபுறம் எனில் ஒருவரின் வாய்ப்பை இன்னொருவர் தட்டி பறிப்பதும் சினிமாவில் அதிகம் நடக்கும்.
தனது மார்க்கெட்டை நிலைநிறுத்திக்கொள்ள பலரும் அப்படி செய்வார்கள். அப்படி ஜெய்சங்கருக்கு போக வேண்டிய ஒரு முக்கிய பட வாய்ப்பை ஜெமினி கணேசன் தட்டி பறித்தது பற்றித்தான் இங்கே பார்க்கப்போகிறோம். ஏவிஎம் தயாரிப்பில் ராமு என்கிற படத்தை தயாரிப்பதாக முடிவு செய்தது. இதில் ஜெய்சங்கர் ஹீரோவாகவும், கே.ஆர்.வி்ஜயா கதாநாயகி எனவும் முடிவு செய்யப்பட்டது.
இந்த தகவலை தெரிந்துகொண்ட ஜெமினி கணேசன் நேராக ஏவி மெய்யப்ப செட்டியாரிடம் சென்று ‘ராமு’ கதையில் நான் நடிக்கிறேன் என சொல்ல செட்டியாருக்கு என்ன சொல்வதன்று தெரியவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தது. அப்போது ஜெமினி நடிப்பில் வெளிவந்த சில படங்கள் சரியாக ஓடவில்லை.
இதையும் படிங்க: நீங்க பேசுனா நான் வாசிக்க மாட்டேன்! கலைஞரையே எதிர்த்த பிரபலம் – ஜெமினி வீட்டில் நடந்த உச்சக்கட்டம்
மேலும், அவரின் சம்பளமும் அதிகம். எனவே அவரிடம் ‘சின்ன நடிகர்களை போட்டு இப்படத்தை எடுக்க நினைக்கிறோம்’ என சொல்ல அவர் சொல்வதை புரிந்துகொண்ட ஜெமினி கணேசன் ‘எனக்கு என்ன சம்பளம் வேண்டுமானாலும் கொடுங்கள். வாங்கிக்கொள்கிறேன்’ என சொல்ல செட்டியார் உடனே தனது மகன்களான சரவணன் உள்ளிட்ட சிலர அழைத்து அவர்களிடம் பேசினார். ஜெமினி கணேசனே நேரில் வந்து கேட்டதால் அவர்களாலும் ஒன்றும் சொல்ல முடியவில்லை.
இப்படித்தான் ராமு படத்தில் ஜெமினி கணேசன் நடித்தார். 1966ம் வருடம் வெளிவந்த இந்த படத்தின் வெற்றி அவரின் மார்க்கெட்டையும் மேலே உயர்த்தியது. பெரிய நடிகராக இருந்தாலும் வாய்ப்பு என்பது எவ்வளவு முக்கியம் என நடிகர்கள் நினைக்கிறார்கள் என்பதற்கு இதை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.
இதையும் படிங்க: பாலச்சந்தரையே ரிஜெக்ட் பண்ண ஜெமினி கணேசன்!.. அப்புறம் நடந்ததுதான் பெரிய டிவிஸ்ட்!..