இத்தனை கோடி கொடுத்துடுங்க.. ஞானவேல் ராஜாவுக்கு ஷாக் கொடுத்த அமீர் டீம்..!
GnanavelRaja: பருத்திவீரன் பிரச்னையை தேவையே இல்லாத ஒரு பேட்டியால் பூகம்பமாக்கி இருக்கிறார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா. அமீர் இயக்கிய அந்த படத்தில் அவருக்கு நிலுவை தொகை இருந்தது. அதை கொடுக்காததால் நீதிமன்றத்தில் இதற்கான வழக்கு நடந்து வருகிறது.
இதற்கிடையில் அமீர் கொடுத்த பேட்டிக்கு எதிர்வினை செய்கிறேன் என்கிற பெயரில் ஞானவேல்ராஜா ஒரு பேட்டி கொடுத்தார். அதில் அமீரை கண்டப்படி விமர்சித்தார். அவரை திருடன் எனக் கூறியது கோலிவுட்டில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. சமுத்திரக்கனி, சசிகுமார், கரு.பழனியப்பன் பலரும் அமீருக்கு ஆதரவாக களமிறங்கினர்.
இதையும் படிங்க: எழில் பிரச்னையை சொல்ல முடியாமல் தவிக்கும் பாக்கியா… வெடித்த செழியன் பிரச்னை..!
இந்த எதிர்ப்பை ஞானவேல்ராஜாவே எதிர்பார்க்கவில்லை. அதனால் கொஞ்சம் வாயை அடக்கி கொள்ளலாம் என முடிவெடுத்தார். ஆனால் அமீர் தரப்பு இது விடுவதாக இல்லை. தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கின்றனர். இதனால் தயாரிப்பாளர் சங்கத்தில் இந்த பிரச்னையை பேசி முடித்து வைக்கும்படி ஞானவேல்ராஜாவே மனு கொடுத்து இருக்காராம்.
அவர்கள் அமீர் சார்பில் இருந்து இயக்குனர் வெற்றிமாறனிடம் இந்த மனு குறித்து கூறினார்களாம். அவர் தான் இரண்டு தரப்புக்கிடையிலும் பேசி சமாதானம் பேச முயன்று வருகிறாராம். அவரோ கொடுத்த 80 லட்சத்துக்கு இணையாக இப்போது 10 கோடி கொடுத்துவிடுமாறு கேட்டு இருக்கிறார். இதில் ஞானவேல்ராஜா அதிர்ச்சி அடைந்ததை விட சூர்யா தரப்பு பெரும் அதிர்ச்சி அடைந்ததாம்.
இதையும் படிங்க: மனுஷனை அந்த அளவுக்கு ஓட்டுனாங்க!.. வெள்ளத்துல இறங்கி மக்களை எப்படி காப்பாத்துறாரு மாரி செல்வராஜ்!
கரு.பழனியப்பன் வைத்து பேசிய போது அவர் 5 கோடியாவது கொடுங்கள் என்றனராம். ஆனால் ஞானவேல்ராஜா 3 கோடி வரை கொடுக்க தயாராக இருக்காராம். இந்நிலையில் நீதிமன்றத்தில் தீர்ப்பு இன்னும் 1 அல்லது 2 மாதத்தில் வர இருக்கிறதாம். அது வரும்போது சொல்வதை செய்து விடலாம் என்றும் ஞானவேல்ராஜா தரப்பு ஒரு முடிவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அமீர் தரப்பு இயக்குனர்களோ அதுக்கு முன்னர் ஒரு தொகையை வாங்கிவிடலாம் என்ற ஐடியாவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஞானவேல்ராஜா தரப்பு காசை கொடுக்க முன்வரும்போது அவர்கள் தரப்பு தப்பு என ஒப்புக்கொள்வதாக தெரிவதாக ரசிகர்கள் கூறுகின்றனர். இதில் அமீரோ என் காசை கொடுத்தால் போதும் என்கிறாராம். அவர் நண்பர்களோ அப்போ காசு மதிப்பு வேற. இப்போ ஏன் அதை விடுகிறீர்கள் என்கிறார்களாம். என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.