Cinema News
கடைசியில என்ன பலிகடா ஆக்கிட்டானுங்க!.. கலவர பூமியான இசை கச்சேரி.. ரைமிங்கில் புலம்பும் ஏ.ஆர். ரஹ்மான்!..
மறக்குமா நெஞ்சம் இசை கச்சேரி சந்தோஷமாக முடியும் என நினைத்து ரசிகர்களை இரவு முழுவதும் பாடல்களை பாடி மகிழ்வித்த ஏ.ஆர். ரஹ்மான் வெளியே அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் பட்ட கஷ்டங்கள் குறித்து சமூக வலைதளங்களில் வெளியான பதிவுகளை பார்த்து ரொம்பவே வேதனையில் ஆழ்ந்துள்ளார்.
30 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வந்த ஏ.ஆர். ரஹ்மான் எந்தவொரு சர்ச்சையிலும் சிக்காத நிலையில், முதன்முறையாக ஒட்டுமொத்த நல்ல பெயரையும் கெடுத்துக் கொண்டதை நினைத்து வருந்தி வருகிறார்.
இதையும் படிங்க: சேர்த்து வச்ச புகழை ஒரே நாளில் காலி செய்த இசைப்புயல் – பரிகாரமாக ரஹ்மான் செய்த மட்டமான செயல்
ஒரு அண்டா பால் இருந்தாலும், அதில் ஒரு துளி விஷம் கலந்து விட்டால் அந்த அண்டா பாலே விஷமாக மாறிவிடும். அது போலத்தான் ஏ.ஆர். ரஹ்மான் நிகழ்ச்சியில் நடந்த சில அசம்பாவித செயல்களால் மொத்த மகிழ்ச்சியும் காணாமல் போய் தற்போது கண்ணீர் வடிக்கும் நிலை உருவாகி உள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றில் வருத்தம் தெரிவித்து பதிவுகளை வெளியிட்டுள்ளார் ஏ.ஆர். ரஹ்மான். அதில், “அன்புள்ள சென்னை மக்களே.. டிக்கெட் வாங்கியவர்களில் சிலர் மோசமான அனுபவத்தை எதிர்கொண்டு நிகழ்ச்சியை காண முடியாமல் போனவர்கள் தயவு செய்து உங்கள் டிக்கெட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து [email protected] என்ற இமெயில் ஐடிக்கு அனுப்புங்கள்.. உங்களுடைய பணம் திரும்பி கிடைக்கும் என்றார்.
இதையும் படிங்க: ஏ.ஆர். ரஹ்மானை அரெஸ்ட் பண்ணுவாங்களா?.. எல்லாமே திட்டமிட்ட சதி.. ஒரே போடாக போட்ட பிரபலம்!..
மேலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விரக்தியுடன், ” சிலர் என்னை GOAT (திறமையானவர்) என்று பாராட்டுகின்றனர். ஆனால், கடைசியில இந்த விவகாரத்தில் நானே பலி ஆடு ஆகிறேன்.
சென்னையில் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வேண்டும், சுற்றுலாத் துறை மேம்பாடு, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் திறன், பார்வையாளர்கள் விதிகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்த வேண்டும், குழந்தைகள், பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்குதல் போன்றவற்றை செய்ய வேண்டும்” என தனது கருத்துக்களை முன் வைத்துள்ளார்.