இந்த படத்துக்கு இவ்ளோதான் ரேட்!.. கோட் படம் இப்படி ஆகிப்போச்சே!.. லியோதான் காரணமா?!..

by சிவா |   ( Updated:2024-05-03 14:03:46  )
இந்த படத்துக்கு இவ்ளோதான் ரேட்!.. கோட் படம் இப்படி ஆகிப்போச்சே!.. லியோதான் காரணமா?!..
X

விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் கோட். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் முதல் திரைப்படம் இது. அஜித்துக்கு மங்காத்தா எனும் மெகா ஹிட் படத்தை கொடுத்த வெங்கட் பிரபு விஜய்க்கு என்ன செய்யப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

இந்த படம் விஜயின் 68வது திரைப்படமாகும். மங்காத்தா பட வெற்றிக்கு பின்னர் மீண்டும் அஜித்தை வைத்து படமெடுக்க வெங்கட்பிரபு பலமுறை முயற்சி செய்தார். ஆனால், சில காரணங்களால் வெங்கட்பிரபு மீது கோபத்தில் இருக்கும் அஜித் அவருக்கு கால்ஷீட் கொடுக்கவே இல்லை. விஜய் - அஜித் இருவரையும் வைத்து ஒரு படத்தை இயக்கவும் வெங்கட்பிரபு திட்டமிட்டார்.

இதையும் படிங்க: ‘விசில் போடு’க்கு பின்னாடி இப்படி ஒரு சம்பவம் இருக்கா? ‘கோட்’ படம் குறித்து முக்கிய அப்டேட் சொன்ன பிரபலம்

ஆனால், அது நடக்கவில்லை. இப்போது கோட் படத்தில் விஜய் மகன் - அப்பா என இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். அதிலும், மகன் விஜயை தொழில்நுட்ப உதவியுடன் 20 வயது விஜயாக காட்ட போகிறார்கள் என சொல்லப்படுகிறது. எனவே, விஜய் ரசிகர்களுக்கு இப்படம் கண்டிப்பாக ஒரு பெரிய விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் விஜயுடன் பிரசாந்த், பிரபுதேவா ஆகியோரும் நடித்திருப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இப்படத்தில் சினேகா மற்றும் மீனாக்‌ஷி சவுத்ரி ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை ஏமாற்றியது.

இதையும் படிங்க: லோகேஷ் போல நான் இல்லை… கோட் பட டிரைலரில் குறித்து வெங்கட் பிரபு சொன்ன சீக்ரெட்…

கோட் படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையும் நிலையில் ஒருபக்கம் இப்படத்தின் வியாபாரமும் துவங்கி இருக்கிறது. ஆனால், தயாரிப்பாளர் தரப்பு எதிர்பார்த்த அளவுக்கு விலை இல்லை என சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டு வினியோக உரிமை லியோ படத்தின் விலையை விட 30 சதவீதம் குறைத்து கேட்கப்படுகிறதாம்.

இதனால், இப்படத்தை தயாரித்துள்ள ஏஜிஎஸ் நிறுவனம் அப்செட் ஆகியுள்ளதாம். இத்தனைக்கும் லியோ படம் பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் நல்ல லாபத்தை கொடுத்திருக்கிறது. ஆனாலும், கோட் படத்தின் வியாபாரம் பெரிய அளவில் இல்லை என்பது ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது. இத்தனைக்கும் விஜய் நடிப்பில் 20 வருடங்களுக்கு முன்பு வெளியான கில்லி படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு 17 கோடிக்கும் மேல் வசூலை அள்ளியது குறிப்பிடத்தக்கது.

Next Story