எந்தப் படமும் தொடாத சாதனையை செய்த ‘கோட்’! தளபதி நீங்களா சினிமாவ விட்டு போறீங்க?

by Rohini |   ( Updated:2024-09-09 17:18:23  )
vijay
X

vijay

Goat Movie: விஜய் நடிப்பில் கடந்த வாரம் ரிலீஸான திரைப்படம் கோட். படம் ரிலீஸாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ரிலீஸாகி 4 நாள்களில் கோட் திரைப்படம் 200 கோடியை தாண்டி வசூல் செய்திருக்கிறது. இன்னொரு பக்கம் படத்தை பற்றி கலவையான விமர்சனத்தையு ரசிகர்கள் பலர் முன்வைக்கின்றனர். இப்படி கலவையான விமர்சனத்தை பெற்ற போதிலும் எப்படி இந்தளவுக்கு வசூலை பெற்றது என்பதை பற்றி பிரபல சினிமா தயாரிப்பாளரான தனஞ்செயனிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த தனஞ்செயன் ஓவர்சீஸை அப்புறம் பார்க்கலாம். கோட் திரைப்படம் இந்த நான்கு நாள்களில் தமிழ் நாட்டில் மட்டும் 100 கோடி வசூல் செய்திருக்கிறது. ஆனால் கரெக்ட்டான நம்பரில் சொல்லமுடியாது. 105 கோடியாக இருக்கலாம். 110 கோடியாக கூட இருக்கலாம். ஆனால் நான்கு நாட்களில் 100 கோடி என்பது மாபெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: கங்குவா விழாவில் ரஜினி பேசியதைக் கேட்டு மிரண்டு போன பாலிவுட்… நடந்ததைக் கேட்டா அதிருதுல்ல..!

இதுவரை இந்தாண்டில் வெளியான எந்தப் படங்களுமே நான்கு நாள்களில் 100 கோடி என்றளவில் வசூலை பெறவில்லை. ஏன் விஜயின் மற்ற படங்களே நான்கு நாள்களில் 100 கோடி வசூலை பெறவில்லை. அப்படி இருக்கும் போது கோட் திரைப்படம் ஒரு புதிய சாதனையை பெற்றிருக்கிறது.

மேலும் நான்கு நாள்களில் 100 கோடி என்றால் எத்தனை பேர் பார்த்திருக்கிறார்கள் என்பதை தோராயமாக சொல்லமுடியும். தமிழ் நாட்டில் மட்டும் நான்கு நாள்களில் 50 லட்சம் பேர் கோட் திரைப்படத்தை பார்த்திருப்பார்கள். டிக்கெட் விலை 190 என்று பார்க்கும் போது அந்த 100 கோடி என்பது சாத்தியமாகும்.

இதையும் படிங்க: இதனால்தான் விசில் போடு பாடலில் அஜ்மல் ஆடவில்லையா? சரியான வெவரம் தாங்கோ!

அப்போ படத்தை பார்த்த அந்த 50 லட்சம் பேர் என்ன முட்டாள்களா? படம் விமர்சன ரீதியாக நல்லா இருக்கப் போய்தானே படத்தை அத்தனை பேரும் போய் பார்த்திருக்கிறார்கள். அதனால் படத்தை பற்றி தேவையில்லாத ஒரு நெகட்டிவிட்டியை யாரும் பரப்ப வேண்டாம் என தனஞ்செயன் கூறியிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் பாதாள கிடங்கில் இருந்த தமிழ் சினிமாவை மீண்டும் தலை நிமிர வைத்த படமாகவும் இந்த கோட் திரைப்படம் அமைந்திருக்கிறது. இனிமேல் இப்படிப்பட்ட படங்கள் வெளி வந்தால்தான் சினிமா நன்றாக இருக்கும் என்றும் தனஞ்செயன் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: மலேசியாவாசுதேவன் கடைசியாக பேசுன அந்த வார்த்தை… நெகிழ்ந்து பேசிய ரஜினி

தனஞ்செயன் கூறுவதை போல இந்த மாதிரி ஒரு சாதனையை விஜயால் மட்டுமே நிகழ்த்த முடியும் என்பதை கோட் திரைப்படம் காட்டுயிருக்கிறது. இந்த சூழ்நிலையில் விஜய் சினிமாவை விட்டு போகிறேன் என்று சொல்வது எவ்வளவு ஒரு நஷ்டம் சினிமாவிற்கு என்பதையும் நினைத்து பார்க்க முடிகிறது.

Next Story