இந்திய சினிமாவில் அதிக வசூல் கோட்தான்!.. புள்ளி விபரத்தை புட்டு வைக்குறாங்களே!..

Goat: தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் விஜய். இவரின் படங்கள் மிகவும் அதிக வசூலை குவிக்கும். இது அவரின் கில்லி படத்தில் துவங்கியது. தமிழ் சினிமாவில் முதல் 50 கோடி வசூலை பெற்றது அந்த படம்தான். அதன்பின் விஜய் நடிக்கும் படங்களுக்கு வியாபாரரீதியாக மவுசு கூடியது.

கடந்த சில வருடங்களாகவே விஜயின் சம்பளம் 100 கோடியை தாண்டியது. அதற்கு காரணம் அவரின் படங்கள் செய்யும் வசூல்தான். தமிழ்நாடு மட்டுமில்லாமல் கேரளா, ஆந்திரா, வட மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் விஜயின் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. எனவே, விஜய் கேட்கும் சம்பளத்தை கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: கோட் படத்தை எடுக்க ராஜமவுலிதான் காரணம்!.. இப்படி சொல்லிட்டாரே வெங்கட்பிரபு!..

வருகிற 5ம் தேதி வெளியாகியுள்ள கோட் படம் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருக்கிறது. இந்நிலையில், வெளிநாடுகளில் கோட் படத்திற்கு இருக்கும் வரவேற்பை திரையுலகினரை ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது. எல்லாம் சரியாக நடந்தால், தமிழ்த் திரையுலகில் அதிக வசூல் செய்த படமாக கோட் படம் அமையும்.

எப்படியெனில், கோட் திரைப்படம் ஏற்கனவே வெளிநாடுகளில் அட்வான்ஸ் புக்கிங்கில் ஒரு மில்லியன் டாலரை பெற்று கொடுத்திருக்கிறது. அமெரிக்கா மற்றும் கனடாவில் மட்டும் சுமார் 4 லட்சத்து 60 ஆயிரம் டாலரை வசூலித்துள்ளது. மேலும் இப்படம் ரிலீஸுக்கு முன்பே அதிகாரப்பூர்வ அமெரிக்காவில் ஒரு மில்லியனைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Goat

Goat

விஜயின் படங்கள் யுகே மற்றும் ஆஸ்திரேலியாவிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஒவ்வொரு பகுதியிலும் ஒட்டுமொத்த அட்வான்ஸ் புக்கிங்கிங் ஒரு லட்சத்து 30 ஆயிரம் டாலரை வசூல் செய்திருக்கிறது. UAE, சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் படத்தின் முதல் நாள் வசூல் ஒரு மில்லியன் டாலரை தாண்டும் என சொல்லப்படுகிறது.

இது எல்லாம் நடந்தால் வெளிநாடுகளில் அதிக வசூல் செய்த இந்திய படமாக விஜயின் கோட் படம் அமையும் என சொல்கிறார்கள் புள்ளி விபர புலிகள். ஒருபக்கம், இப்படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பையும், அட்வான்ஸ் புக்கிங்கையும் பார்க்கும்போது இந்தியாவிலும் கோட் படம் வசூலை குவிக்கும் என்றே எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்.

இதையும் படிங்க: விஜயிற்காக களமிறங்கிய ரசிகர் கூட்டம்… கோட் டிக்கெட் விற்பனையில் புதிய சாதனை…

Related Articles
Next Story
Share it