அமெரிக்காவிலும் வசூல் சாதனை படைத்த கோட்... 3 மணி நேரம் போறதே தெரியாதாம்..!
தளபதி விஜய்க்கு 68 வது படமாக வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் விரைவில் வெளியாகும் படம் கோட். விஜய் இரு மாறுபட்ட வேடங்களில் நடித்து அசத்துகிறார். படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றன.
அந்த வகையில் இந்தப் படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் நடிப்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு. விஜயகாந்த் ஏஐயில் வருவதால் பன்மடங்கு எதிர்பார்ப்பாகி விட்டது. படம் வரும் செப்டம்பர் 5ல் வருவதால் வெளிநாடுகளில் இப்போதே கோட் முன்பதிவில் களைகட்டுகிறதாம்.
தமிழ்நாடு தவிர கோட் படத்தை பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் அதிகாலை 4 மணிக்கே பார்த்து விடலாம். ரசிகர்கள் பலரும் இதற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். கோட் படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் வேண்டாம் என்று தவிர்த்து விட்டார் விஜய்.
அதே நேரம் படத்திற்குத் தேவையான புரொமோஷன்களைச் செய்ய க்ரீன் சிக்னல் கொடுத்து விட்டாராம். படத்திற்கு சென்சார்போர்டு அதிகாரிகள் யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர்.
படத்தில் ஒரு சீன் கூட போரடிக்கவில்லையாம். இதைப் போல படத்தோட மேக்கிங் மற்றும் எடிட்டிங் பிரமாதமாக உள்ளதாம். இதை படம் முழுவதும் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகளே தெரிவித்துள்ளனர்.
படத்தில் நடிக்கும் நடிகர்களின் அறிமுகங்களை ஆரம்பத்திலேயே கொடுத்து விடுகிறார் வெங்கட்பிரபு. 15வது நிமிடத்தில் இருந்து இன்டர்வெல் வரை பரபரப்பாகவே செல்கிறது.
வெறித்தனமான திரைக்கதை இருப்பதால் படம் இடைவேளைக்குப் பிறகும் எந்த இடத்திலும் தேங்கவே இல்லை. கிளைமாக்ஸ் வரை படம் ஜெட் வேகத்தில் தான் செல்கிறது. இதைப் படம் முழுவதும் பார்த்த தணிக்கைக் குழுவினரே தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் கோட் படம் முன்பதிவு செய்தததில் ரெக்கார்ட் படைத்துள்ளது. 100 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை வரை 307 காட்சிகளுக்கு 6600 டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்துள்ளது.
Also read: டேய் எனக்கே ஒன்னும் புரியலை… கோட் படத்துக்கு விஜய் சொன்ன முதல் கமெண்ட்… அதிர்ச்சியில் ரசிகர்கள்
மொத்தம் ஒரு லட்சத்து இருபத்து இரண்டாயிரத்து நானூற்றி அறுபத்தெட்டு அமெரிக்க டாலர்களை வசூலித்துள்ளதாம். அதாவது இந்திய மதிப்பில் 1.43 கோடி என கூறப்படுகிறது. விஜயின் கோட் படம் பிரியமியர் ஷோக்களில் மட்டுமே ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.