கோட் படம் ஓடிடியில் இப்படிதான் வெளியாகும்… சர்ப்ரைஸ் கொடுத்த வெங்கட் பிரபு

by Akhilan |
கோட் படம் ஓடிடியில் இப்படிதான் வெளியாகும்… சர்ப்ரைஸ் கொடுத்த வெங்கட் பிரபு
X

#image_title

GoatMovie: வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் கோட் திரைப்படத்தின் ரிலீஸ் நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் படத்தின் நீளம் குறித்து இயக்குனர் பேசியிருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கல்பாத்தி எஸ் அகோரம் சார்ந்த அர்ச்சனா கல்பாத்தி தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். சினிமாவை விட்டு அரசியலுக்கு மாற இருக்கும் விஜயின் கடைசி சில படங்களில் ஒன்றாக வெளியாகும் கோட் மீது ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

இதையும் படிங்க: மோகன்லால் ஏன் விலகணும்? ரூபஸ்ரீக்கு நடந்த அக்கிரமத்தைப் பாருங்க…

அது மட்டுமல்லாமல் முதலில் இப்படத்தின் பாடல்கள் பெரிய அளவில் ஏமாற்றமே கொடுத்தது. இதனால் ரசிகர்கள் கவலையில் இருந்த நிலையில் படத்தின் டிரைலர் மீண்டும் படத்தின் மீதான உச்சபட்ச எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அது மட்டும் அல்லாமல் இயக்குனர் வெங்கட் பிரபு இதுவரை தன்னுடைய எல்லா படத்திலும் மினிமம் கேரன்டி என்டர்டைன்மெண்டை கொடுத்திருப்பதில் எங்குமே தவறவிட்டதில்லை.

Goat

இதனால் வெங்கட் பிரபுவை நம்பியே பல ரசிகர்கள் தியேட்டர் படையெடுப்புக்கு தயாராகி வருகின்றனர். மேலும், இப்படத்தின் நீளம் எப்போதும் போல அல்லாமல் மூன்று மணி நேரங்களை தொட்டிருக்கிறது. முதலில் இரண்டு மணி நேரம் 58 நிமிடமிருந்து காட்சிகள் சென்சார் எடிட்டிங் பிறகு 3 மணி நேரங்கள் மூன்று நிமிடத்தை தொட்டது.

இதையும் படிங்க: கடைசி நொடியில் ராமமூர்த்தி… மீனாவை திட்டும் விஜயா… கவலையில் இருக்கும் ராஜீ…

இந்த கதைக்கு இவ்வளவு நீளம் தேவைப்பட்டது. அவ்வளவு காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளது. மொத்தமாக இன்னும் சில முக்கிய காட்சிகளை கூட நாங்கள் நீக்கி இருக்கிறோம். அதை பின்னர் டெலிட் காட்சிகளாக வெளியிட முடிவு செய்துள்ளோம். ஓடிடியில் டைரக்டர் வெர்ஷனாக வெளியிட்டால் படத்தின் நீளம் 3 மணி நேரம் 20 நிமிடங்களை தாண்டும் எனவும் வெங்கட் பிரபு குறிப்பிட்டு இருக்கிறார்.

Next Story