Goat Movie: விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் முக்கிய ஒரு விஷயமும் இடம்பெற இருப்பதாக சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இப்படத்தினை கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்க இருக்கிறார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா, மீனாட்சி செளத்ரி ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கனவு நனவாகிடுச்சு!.. என் குருநாதருக்கே டான்ஸ் சொல்லிக் கொடுத்துட்டேன்!.. சந்தோஷத்தில் சாண்டி!..
இப்படத்தில் அப்பா, மகன் என இருவேடங்களில் விஜய் நடிக்கிறார். வில்லன் வேடமும் விஜயே ஏற்க இருக்கிறார். ஒரு பாடலுக்கு திரிஷா நடனம் ஆட இருக்கிறார் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது. சமீபத்தில் விஜயின் கோட் திரைப்படம் திருவனந்தபுரத்தில் நடந்தது. அப்போது ஒரு ஸ்டேடியத்தில் ஷூட்டிங் நடந்ததாகவும் அதில் கேப்டன் மகேந்திர சிங் தோனி நடித்ததாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.
இந்நிலையில், கோட் திரைப்படத்தில் கிரிக்கெட் கதையும் ஒரு அம்சமாக இடம்பெற இருக்கிறதாம். பொதுவாகவே வெங்கட் பிரபு கிரிக்கெட் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர். ஐபிஎல் நடக்கும் இச்சமயத்தில் பரவும் இத்தகவல் உண்மையாக கூட இருக்கலாம் எனக் கிசுகிசுக்கப்படுகிறது.
இதே வேளையில், லைகா புரோடக்ஷன் தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் இயக்க இருக்கும் திரைப்படமும் கிரிக்கெட் கதையாக தான் இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் அப்பா, மகன் இருவரும் ஒரே கதையில் நடிக்க இருப்பது ஆச்சரியத்தினை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: பட வாய்ப்புகள் போச்சு!.. அதிரடியா மீண்டும் குக் வித் கோமாளிக்கு வந்த கோமாளிகள்.. அட அவருமா?..
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…