Connect with us
venkat

Cinema News

ரிலீஸ் தேதிக்கே ஆப்பு!.. ஆடிப்போன வெங்கட்பிரபு!.. கோட் படத்திற்கு வந்த சிக்கல்!..

பொதுவாக ஒரு திரைப்படம் உருவாகும்போதே ரிலீஸ் தேதியை முடிவு செய்து கொள்வார்கள். குறிப்பாக பெரிய நடிகர்களின் படங்கள் எனில் நடிகர்களின் ரசிகர்களுக்காக கண்டிப்பாக ரிலீஸ் தேதியை முன்பே சொல்லி விடுவார்கள். அப்படி அறிவிப்பதன் பின்னணியில் வியாபார கணக்கும் இருக்கிறது.

ஆனால், சில காரணங்களால் அந்த ரிலீஸ் தேதி தள்ளிப்போவதும் நடப்பதுண்டு. தற்போது இந்த சிக்கல் கோட் படத்திற்கும் ஏற்பட்டிருக்கிறது. லியோ படத்திற்கு பின் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் இது. விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார்.

இதையும் படிங்க: இந்தியன் 2 டிரெய்லர் அப்டேட்..! கமலைப் பற்றி ரஜினி இப்படி சொல்லலாமா..?!

அப்பா – மகன் வேடத்தில் நடிப்பதால் மகன் விஜயை மிகவும் இளம் வயதாக காட்டவிருக்கிறார்கள். இதற்காக ஹாலிவுட் சென்று டீஏஜிங் என்கிற தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருக்கிறார்கள். இதற்காகத்தான் விஜய் சமீபத்தில் வெங்கட்பிரபுவுடன் அமெரிக்கா சென்றுவிட்டு திரும்பினார்.

கோட் படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 5 என ஏற்கனவே அறிவித்துவிட்டார்கள். அமெரிக்காவில் நடக்கும் டீ ஏஜிங் பணிகள் ஆகஸ்டு 10ம் தேதி முடிந்துவிடும் என சொல்லப்பட்டது. ஆனால், இப்படத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன் என எல்லோரையும் சிறு வயதாக காட்டவிருப்பதால் டிஏஜிங் பணி திட்டமிட்டபடி ஆகஸ்டு 10ம் தேதி முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. ஒருவேளை ஒரு வாரமோ இல்லை 10 நாட்களோ தாமதம் ஆகும் என டீஏஜிங் பண்ணும் நிறுவனம் சொல்லிவிட்டதாம்.

இதையும் படிங்க: சட்டு புட்டுனு வேலைய ஆரம்பிங்க! சமாதான புறாவை பறக்கவிட்ட லைக்கா.. ரெடியான அஜித்

இதை கேட்டு ஆடிப்போயிருக்கிறார் வெங்கட்பிரபு. ஏனெனில், அவர்கள் கொடுத்த பின்னர்தான் டி.ஐ வேலைகளை முடித்துவிட்டு பின்னர் எடிட்டிங், பின்னணி இசை, டப்பிங் என பல பணிகள் இருக்கிறது. எனவே, திட்டமிட்டபடி செப்டம்பர் 5ம் தேதி வெளியாகுமா என்கிற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.

டீஏஜிங் பணிகள் தள்ளிப்போனால் கோட் படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளிப்போகும். அது பல சிக்கல்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படி இருந்தாலும் கோட் படத்தின் ரிலீஸ் எப்போது என்பது ஆகஸ்டு 10ம் தேதிக்கு மேல் தான் தெரியும்.

google news
Continue Reading

More in Cinema News

To Top