வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வரும் நடிகர் விஜய் தனது அரசியல் வாழ்க்கைக்காக ஒவ்வொரு அடியும் பார்த்து பார்த்து எடுத்து வைத்து வருகிறார்.
கோட் படத்தின் காட்சிகளை இலங்கையில் படமாக்க வெங்கட் பிரபு முடிவு செய்து வைத்த நிலையில், இப்போதைக்கு இலங்கைக்கு சென்றால் அரசியலில் பிரச்சனை வரும் என்பதால் கேரளாவிலேயே படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடித்து விடலாம் என விஜய் உத்தரவு போட வெங்கட் பிரபு கேரளாவில் ஐந்து நாட்கள் கோட் படப்பிடிப்பை நடத்தி முடித்து விட்டார்.
இதையும் படிங்க: இங்க எல்லோருக்கும் தெரிஞ்சி போச்சி!.. வண்டிய அங்க விடு!.. ஷங்கரோட நிலமை இப்படி ஆகிப்போச்சே!..
அடுத்ததாக பல்வேறு வெளிநாடுகளில் சண்டைக் காட்சிகளை எடுக்க வேண்டும் என வெங்கட் பிரபு திட்டமிட்டிருந்த நிலையில், பல நாடுகளுக்கு வேண்டாம் என்றும் ரஷ்யாவில் மட்டும் சண்டைக் காட்சிகளை வைத்துக்கொள்ளலாம் என விஜய் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
விரைவில் கோட் படக்குழு ரஷ்யா செல்ல உள்ள நிலையில், ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கு ஓட்டுப்போட தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வருவாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஒரு கட்சி அறிவித்துவிட்டு அதன் தலைவரான விஜய் ஓட்டு போடாமல் படப்பிடிப்பில் இருந்தால் கடும் விமர்சனத்திற்கு ஆளாவார் என்றும் கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: மஞ்சுமெல் பாய்ஸ், பிரேமலு அடுத்தடுத்து மலையாள படங்களை மடக்கிய ஓடிடி நிறுவனம்!.. ரிலீஸ் எப்போ?..
விஜய் நடித்த சர்க்கார் படத்தில் கூகுள் நிறுவனத்தின் சிஇஓவாக நடித்த போதே ஓட்டு போடுவதற்காக சென்னை வருவார் நடிகர் விஜய். தேர்தல் சமயங்களில் சைக்கிள், கார், பைக் உள்ளிட்டவற்றில் வந்து தனது ஓட்டை செலுத்தி விட்டு செல்லும் விஜய் இந்த வருடமும் கட்டாயம் ஓட்டு போட வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்காக கூடிய விரைவில் ரஷ்யாவுக்கு புறப்படும் கோட் படக்குழு வரும் ஏப்ரல் 14-ஆம் தேதியுடன் ரஷ்யாவின் படப்பிடிப்புகளை முடித்துவிட்டு மீண்டும் சென்னைக்கு திரும்ப போவதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரபல காமெடி…
விவாகரத்து வழக்கு…
Simran: தமிழ்…
Suriya 45:…
விடுதலை 2…