ஏங்க மறுபடியும் பிரச்னையை ஆரம்பிக்கிறீங்க? கோட் டிரைலரில் இது தேவையா? வெடித்த சர்ச்சை…
விஜயின் கோட் டிரைலர் வெளியாகி இருக்கும் நிலையில் எப்போதும் போல் மீண்டும் ஒரு சர்ச்சையை படக்குழுவே தொடங்கி வைத்து இருப்பதாக பிரபல திரை விமர்சகர் செய்யாறு பாலு தெரிவித்து இருக்கிறார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். இப்படத்தின் முதல் அறிவிப்பில் இருந்தே ரசிகர்கள் என்ன இதெல்லாம் ஒரு அப்டேட்டா என்ற மனநிலையில் தான் இருந்தனர்.
இதையும் படிங்க: என்னங்க அம்புட்டு பஞ்சமா? தங்கலான் படத்தின் முக்கிய முடிவு… விக்ரம் சொன்ன நியூஸ்…
வேற லெவலில் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு படக்குழு பெரிய ஏமாற்றத்தினையே கொடுத்தது. அந்தவகையில், படத்தின் பாடல்கள் கூட பெரிய ஏமாற்றமாகவே ரசிகர்களுக்கு அமைந்தது. பொதுவாக விஜய் படத்தின் பாடல்கள் வைரல் ஹிட்டடிக்கும். ஆனால் இப்படத்தின் பாடல்கள் இதுவரை விமர்சனங்களையே குவித்தது.
ஆனால் இதற்கெல்லாம் எதிர்மாறாக தற்போது வெளியாகி இருக்கும் கோட் திரைப்படத்தின் டிரைலர் செம வரவேற்பை பெற்றுள்ளது. 2 நிமிடம் 52 நொடி ஓடும் டிரெயிலரில் படக்குழு எல்லாருக்குமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பிரசாந்த் வாய்ஸில் இப்படம் தொடங்கும் போதே அவருக்கும் இப்படத்தில் பலமான பாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது.
இதையும் படிங்க: விஜயோட இருக்கு… ஆனால் அஜித்தோட இல்லை.. திரிஷா சொன்ன சீக்ரெட்…
அடுத்த காட்சியில் விஜய் பெண்ணுடன் பப்பில் ஆடிக்கொண்டு இருப்பார். காந்தி வேஷம் போட்டு பார்த்து இருக்கேன். காந்தியே வேஷம் போட்டு இப்போதான் பார்க்கிறேன் என வில்லன் மோகன் பேசும்படி ஒரு டயலாக்கும் இடம்பெற்று இருக்கும். வெங்கட் பிரபுவுக்கு இந்த குசும்பு தேவையா? இந்த பெயரை வச்சு பிரச்னையை ஆரம்பிக்காமல் இருந்தால் சரிதான் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.