விடாமுயற்சி அப்புறம் பாப்போம்!. டீலில் விட்ட அஜித்!.. குட் பேட் அக்லி ஷூட்டிங் ஸ்டார்ட்!..

by சிவா |
ajith
X

துணிவு படம் வெளியாகி ஒன்றரை வருடங்கள் ஆன நிலையிலும் அஜித்தின் அடுத்த படம் இதுவரை வெளியாகவில்லை. சரி ரிலீஸ் ஆகவில்லை என்றாலும் பரவாயில்லை. அடுத்த படத்தின் ஷூட்டிங்கே இன்னும் முடியவில்லை. துணிவு படத்திற்குபின் விடாமுயற்சி என்கிற படம் துவங்கியது. மகிழ் திருமேனி இயக்க லைக்கா நிறுவனம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. அசர்பைசானில் படப்பிடிப்பு துவங்கியது.

ஆனால், படப்பிடிப்பு பல சிக்கல்களை சந்தித்தது. பனிப்புயல், மழை என பல காரணங்களால் படப்பிடிப்பு தடைபட்டது. வேறு எங்கேயாவது படப்பிடிப்பு தளத்தை மாற்றலாம் என முடிவெடுத்த நேரத்தில் லைக்காவுக்கு பொருளாதார சிக்கல் ஏற்பட்டது. இப்போது அந்நிறுவனம் தயாரித்து வரும் வேட்டையன் படம் வியாபாரம் ஆன பின்னரே விடாமுயற்சி படப்பிடிப்பு துவங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க: முதல் பிளாக்பஸ்டர்!.. தமன்னா பண்ண புண்ணியத்தால் தப்பித்த தமிழ் சினிமா!.. 7 நாள் வசூல் எவ்வளவு?

எனவே, விடாமுயற்சி படத்தின் எப்போதும் துவங்கும் என்கிற ஏக்கமும் ரசிகர்களுக்கு எழுந்திருக்கிறது. இந்த படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் வில்லனாக நடிப்பதாக சொல்லப்பட்டது. அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். அதோடு, பிக்பாஸ் புகழ் ஆரவும் இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

சில நாட்களுக்கு முன்பு ஆரவை வைத்து காரை ஓட்டு அது கீழே விழுந்து விபத்துக்குள்ளான வீடியோவும் வெளியானது. இதைப்பார்த்த பலரும் வலிமை படத்தில் செய்ததை போலவே இந்த படத்திற்கும் புரமோஷன் செய்ய துவங்கி விட்டனர் என சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர். இப்போது படத்தின் படப்பிடிப்பு மொத்தமாக நிறுத்தப்பட்டுவிட்டது.

இதையும் படிங்க: ஈரம் சொட்ட சொட்ட சும்மா அள்ளுது!.. தாய்லாந்தில் ஜாலி பண்ணும் விஜே பாரு!..

ஒருபக்கம், பொறுத்து பொறுத்து பார்த்து வெறுத்துபோன அஜித் மார்க் ஆண்டனி ஹிட் கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரனை அழைத்து குட் பேட் அக்லி என்கிற படத்தை துவங்கினார். இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. இந்த தகவலை அஜித் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து சந்தோஷப்பட்டு வருகின்றனர்.

இந்த படத்தில் அஜித் 3 கெட்டப்புகளில் நடிக்கவிருக்கிறார். இது தொடர்பான செய்திகள் ஏற்கனவே வெளியானது. அதில் ஒரு கெட்டப்பில் வரலாறு படத்தில் வந்ததை போல நீண்ட தலைமுடியுடன் அஜித் வரவிருக்கிறாராம். எனவே, இந்த படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story