Cinema News
கருப்பர் நகரத்தில் நடந்த பஞ்சாயத்து!.. அறம் இயக்குனருக்கு இப்படி ஒரு நிலைமையா?!…
Gopi nainar: தமிழ் சினிமாவை பொறுத்தவரை சமூக பிரச்சனையை பேசும் கதையை வைத்திருக்கும் பல இயக்குனர்கள் வாய்ப்பு கிடைப்பதில்லை என்பதுதான் கசப்பான நிஜம். வழக்கமான கமர்ஷியல் மசாலா அல்லது ஹீரோவை தூக்கி பிடிக்கும் ஆக்ஷன் கதைகளை வைத்திருக்கும் இயக்குனர்களைத்தான் பெரிய ஹீரோக்களும் விரும்புகிறார்கள்.
எனவே, நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் மினிமம் பட்ஜெட் பட்டில் மட்டுமே உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி ஒரு இயக்குனர்களில் ஒருவர்தான் கோபி நாயினார். ஆழ்துழைக்கிணறுகள் தமிழகத்தின் பல இடங்களில் இன்னும் மூடப்படவில்லை. அதில் இன்னமும் குழந்தைகள் விழுந்து இறப்பாக அப்படத்தில் கதை அமைத்திருந்தார்.
இதையும் படிங்க: மண் குடிசை வாசல் என்றால்.. அறம் இயக்குநரின் அடுத்த தரமான படைப்பு!.. கருப்பர் நகரம் டீசர் இதோ!..
இந்த கதையில் நயன்தாரா நடித்ததால் இப்படத்திற்கு பெரிய ரீச் இருந்தது. படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றியும் பெற்றது. ஒருபக்கம் கோபி நாயினாரின் கதையை சுட்டு முருகதாஸ் கத்தி படம் எடுத்ததாகவும் சொல்லப்பட்டது. அதையும் பெரிய பிரச்சனை செய்யாமல் கோபி நாயினார் விட்டுவுட்டார்.
இப்போது நடிகர் ஜெய்யை வைத்து கருப்பர் நகரம் என்கிற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர் வீடியோ ஒரு வாரத்திற்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. உண்மையில், கருப்பர் நகரம் படம் 90 சதவீதம் முடிந்துவிட்டது. ஆனால், ஏதோ ஒரு காரணத்தால் கோபி நாயினாருக்கும் அப்படத்தின் தயாரிப்பாளருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்த படத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சொல்லிவிட்டு படத்திலிருந்து கோபி நாயினார் விலகி விட்டாராம். எனவே, மீதி 10 சதவீதத்தை வேறு ஒருவரை வைத்து முடித்து ரிலீஸ் செய்யும் வேலையில் தயாரிப்பாளர் இறங்கியுள்ளார் என செய்திகள் வெளிவந்துள்ளது.
இதையும் படிங்க: தட்டிப்போன விருது.. தயக்கமே இல்லாமல் குட்டி பத்மினி செய்த காரியம்… அமைச்சர் கொடுத்த ஆச்சரியம்..!