Connect with us

Cinema History

தட்டிப்போன விருது.. தயக்கமே இல்லாமல் குட்டி பத்மினி செய்த காரியம்… அமைச்சர் கொடுத்த ஆச்சரியம்..!

Kuzhanthaiyum Dheivamum: நடிகை குட்டி பத்மினிக்கு மத்திய அரசு தேர்வுக்குழு இவருக்கு விருது பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இயக்குனர் பெயரால் நடந்த பிரச்னையால் அந்த விருது மிஸ்ஸாக போகும் போது தயங்காமல் குட்டி பத்மினி செய்த விஷயத்தினை பகிர்ந்துள்ளார்.

கிருஷ்ணன் மற்றும் பஞ்சு இயக்கத்தில் 1965ம் ஆண்டு ரிலீஸான திரைப்படம் குழந்தையும் தெய்வமும். ஏ.வி.மெய்யப்பன் தயாரிப்பில் ஜெய்சங்கர், ஜமுனா மற்றும் குட்டி பத்மினி ஆகியோர் நடித்திருந்தனர். படம் மிகப்பெரிய அளவில் ரீச் கொடுத்த நிலையில் செம வரவேற்பு கிடைத்தது.

இதையும் படிங்க: முத்துவுக்கு செக் வைத்த பைனான்சியர்..! ரோகினியால் சங்கடப்பட்ட மீனா… ஸ்ருதி-ரவியின் திட்டம் என்னவோ?

இதையடுத்து மத்திய அரசு தேர்வுக்குழு, சிறந்த குழந்தை நட்சத்திரமாக அவரை தேர்வு செய்தது. அப்போது தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சராக இருந்த இந்திரா காந்தி விருதுகளை வழங்க இருந்தார். விருது விழா நடந்த நாளும் வந்தது. ஜெய்சங்கர், ஜமுனா, டைரக்டர்கள் கிருஷ்ணன் – பஞ்சு ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட இருந்தது. 

ஆனா அங்கு தான் சிக்கல் வந்து இருக்கிறது. டைரக்டர் ஒருவர் என நினைத்து விட்டனர். ஆனால் அங்கு இரண்டு பேர் வந்ததும், குட்டி பத்மினிக்கு வழங்க இருந்த மெடலை டைரக்டர்களுக்கு கொடுத்து சமாளித்தனர். இதனை குட்டி பத்மினியால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

இதையும் படிங்க: மீண்டும் வீட்டுக்குள் பாக்கியாவை லாக் செய்ய திட்டம் போடும் ஈஸ்வரி..! பிரச்னையில் குளிர் காயும் கோபி..!

இதையடுத்து தயாரிப்பாளரிடம் காரணத்தினை கேட்கிறார் பத்மினி.  அங்கிருந்து விழா முடிந்ததும் இந்திரா காந்தி கிளம்புகிறார். நிர்வாகக்குழு செய்த தவறுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்? என ஓடிப்போய் இந்திரா காந்தியை கட்டிக்கொண்டு அழுகிறார். உடனே இந்திரா காந்தி என்னமா வேணும் உனக்கு? என்று விசாரித்தார். விருது விஷயத்தினை சொல்லி இருக்கிறார்.

உடனே இந்திரா காந்தி அந்த படத்தினை பார்க்க வேண்டும் எனக் கேட்கிறார். அடுத்த நாளே படத்தினை பார்த்தவர். குட்டி பத்மினிக்கு விருது கொடுக்க வேண்டும் என்கிறார். மறுநாள் எனக்கு விருது கொடுத்து நல்லா நடிச்சிருக்க என்று கன்னத்தில் முத்தம் கொடுத்து பாராட்டினார். குழந்தையான பத்மினி தான் ஒரு நிமிடம் தயங்கி இருந்தால் கூட விருது போயிருக்கோம் என ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார். 

google news
Continue Reading

More in Cinema History

To Top