Cinema History
இப்ப கால்ல விழுறான்.. பின்னாடி காலை வாரி விடுவான்!.. வடிவேலுவை அப்போதே கணித்த கவுண்டமணி!.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கலக்கியவர் கவுண்டமணி. கோவையை சேர்ந்த இவரின் நிஜப்பெயர் சுப்பிரமணி. துவக்கத்தில் நாடகங்களில் நடித்து வந்தார். பதினாறு வயதினிலே திரைப்படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். பாக்கியராஜின் உதவியில்தான் அந்த வாய்ப்பு கிடைத்தது. அடுத்து நடித்த கிழக்கே போகும் ரயில் பட வாய்ப்பும் அப்படித்தான் கிடைத்தது.
அப்படியே படிப்படியாக சினிமாவில் வளர்ந்து ஒரு கட்டத்தில் சோலோ காமெடி பண்ணும் நிலைக்கு வந்தார் கவுண்டமணி. தன்னுடன் செந்திலையும் சேர்த்துகொண்டார். இருவரும் சேர்ந்து பல திரைப்படங்களில் காமெடி காட்சிகளில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தனர். கவுண்டமணி – செந்தில் பீக்கில் இருந்த நேரத்தில் சினிமாவில் நுழைந்தவர்தான் வடிவேலு.
இதையும் படிங்க: வேகமா போய் குத்தி நிறுத்துய்யா!.. காரை வைத்து கவுண்டமணியை வஞ்சம் தீர்த்த வடிவேலு!..
துவக்கத்தில் ஒரு சின்ன நடிகராக காமெடி காட்சிகளில் கவுண்டமணியிடம் அடியும், உதையும் வாங்கும் கதாபாத்திரத்தில்தான் நடித்தார். சின்னக்கவுண்டர் படத்தில் கூட கவுண்டமணி வடிவேலுவை சேர்க்க மறுக்க விஜயகாந்தின் உதவியால் அவருக்கு குடைபிடிக்கும் வேடம் கிடைத்தது.
துவக்கத்தில் சினிமாவில் வாய்ப்புகளை வாங்குவதற்காக எல்லோரின் காலிலும் விழுந்தார் வடிவேலு. இது பலருக்கும் தெரியாது. குடும்பத்தில் உள்ள சிக்கல்களை நகைச்சுவையுடன் சொல்லும் இயக்குனர் வி.சேகரின் படத்தில் நடிக்கை ஆசைப்பட்ட வடிவேலு அவரிடம் சென்று ‘தேவர்மகன் படத்தில் நடித்திருக்கிறேன். பாருங்கள். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கண்ணே’ என கெஞ்சினார்.
இதையும் படிங்க: ஷூட்டிங் முடிஞ்சாலும் வீட்டுக்கு போக மாட்டாரு கவுண்டமணி!.. என்ன செய்வாரு தெரியுமா?…
சரி என ‘வரவு எட்டணா செலவு பத்தனா’ படத்தில் வாய்ப்பு கொடுத்தார் வி.சேகர். தினமும் படப்பிடிப்பு வரும்போது காலை, மதியம், மாலை என 3 வேளையும் சேகரின் காலை தொட்டு கும்பிடுவாராம் வடிவேலு. இதைப்பார்த்த கவுண்டமணி ‘இவன் உன்கிட்ட நல்லா நடிக்கிறான். ஓவரா பண்றான். பின்னாடி கண்டிப்பா காலை வாரி விடுவான்’ என சொல்லி இருக்கிறார்.
துவக்கத்தில் தனக்கு வாய்ப்பு கொடுத்த ராஜ்கிரண், வி.சேகர், விஜயகாந்த் என பலரையும் பின்னாளில் வளர்ந்தபின் வடிவேலு கண்டுகொள்ளவும் இல்லை, மதிக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.