Connect with us
goundamani

Cinema History

ஷூட்டிங் முடிஞ்சாலும் வீட்டுக்கு போக மாட்டாரு கவுண்டமணி!.. என்ன செய்வாரு தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடியில் உச்சம் தொட்டவர்தான் கவுண்டமணி. காட்சியை காமெடியாக மாற்றாமல் தனது கவுண்ட்டர் மற்றும் நக்கல் வசனங்களால் ரசிகர்களை சிரிக்க வைத்தவர் இவர். இவரும் செந்திலும் இணைந்தால் காமெடிக்கு பஞ்சமே இருக்காது. 80களில் துவங்கிய கவுண்டமணியின் பயணம் 30 வருடங்களுக்கும் மேல் தமிழ் சினிமாவில் நீடித்தது.

துவக்கத்தில் நாடகங்களில் நடித்து வந்தவர்தான் கவுண்டமணி. அப்போது அவரின் பெயர் சுப்பிரமணி. யார் என்ன சொன்னாலும் அதற்கு நக்கலாக ஒரு கவுண்ட்டர் கொடுப்பார் என்பதால் கவுண்ட்டர் மணி ஆனார். ஆனால், பதினாறு வயதினிலே படத்தின் டைட்டில் கார்டில் கவுண்டமணி என தவறாக போட்டுவிட அந்த பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது.

இதையும் படிங்க: என் காமெடியை கெடுத்து விட்டான் ‘கருப்பன்’… விஜயகாந்தை நக்கலடித்த கவுண்டமணி…

90களில் கவுண்டமணியின் காமெடியை நம்பியே பல படங்கள் உருவானது. சத்தியராஜ், பிரபு, சரத்குமார், கார்த்திக் ஆகியோரின் படங்களில் கண்டிப்பாக கவுண்டமணியும், செந்திலும் இருப்பார்கள். கவுண்டமணிக்கு நடிப்பு என்பது உடலில் ஊறிப்போன விஷயம். இயக்குனர் காட்சியை சொன்னால் போது அவராகவே சொந்தமாக வசனங்களை பேசி அசத்தி விடுவார்.

goundamani

அதோடு, அவருடன் நடிக்கும்போது சிரிக்காமல் நடிப்பதும் மிகவும் கஷ்டம். எதிர்பார்க்காத நேரத்தில் ஒரு கவுண்ட்டரை கொடுத்து எல்லோரையும் சிரிக்க வைத்துவிடுவார். பல நடிகர்களும் அவருடன் நடிக்கும்போது தடுமாறி சிரித்து விடுவார்கள். அதன்பின் மீண்டும் அந்த காட்சியை எடுப்பார்கள்.

இதையும் படிங்க: கவுண்டமணி – செந்திலை விட ராஜ ரகளை செய்த அந்த கூட்டணி! இவர்கள அடிச்சுக்க யாருமில்ல

அதேபோல், தனக்கான காட்சிகள் சீக்கிரம் முடிந்துவிட்டாலும் வீட்டுக்கு போக மாட்டாராம் கவுண்டமணி. இயக்குனரிடம் ‘இன்னும் என்ன வச்சி எதாவது எடுங்க.. இல்லனா மத்தவங்க நடிக்கிற காட்சியில ஒரு ஒரமா நிக்குறேன். சீன் அழகா வரும் இல்ல’ என சொல்வாராம். அட கவுண்டமணியே சொல்லிட்டாரேன்னு இயக்குனரும் ஒத்துக்கொள்வார்கள்.

அப்படி நிற்கும்போதும் எதாவது வசனத்தை பேசி அந்த காட்சியை தன்னுடைய காட்சியாக மாற்றிவிடுவாராம் கவுண்டமணி. அதோடு, கேப் கிடைத்தால் ஹீரோவையும் கலாய்த்து வசனம் பேசிவிடுவார். அதனாலேயே ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் கவுண்டமணியை விட்டுவிட்டு ஜனகராஜ், செந்தில் ஆகியோரை தனது படங்களில் பயன்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema History

To Top