சதுரங்க வேட்டை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக மாறியவர் ஹெச்.வினோத். இவர் பார்த்திபனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். முதல் படத்திலேயே கவனம் ஈர்த்ததால் இவருக்கு அடுத்தடுத்த படங்கள் கிடைத்தன. இரண்டாவதாக கார்த்தியை வைத்து தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தை எடுத்து ரசிகர்களை அதிர வைத்தார். இந்த படத்திற்காக சில வருடங்கள் களப்பணி செய்து படத்தை உருவாக்கினார்.
அதன்பின் அஜித்தை வைத்து நேருக்கு நேர், வலிமை, துணிவு ஆகிய மூன்று படங்களை இயக்கி கோலிவுட்டின் முக்கிய இயக்குனராக மாறினார். தற்போது விஜயை வைத்து ஜனநாயகன் படத்தை இயக்கி முடித்திருருக்கிறார் இந்த படம் வருகிற 10-ம் தேதி உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இது விஜயின் கடைசி படம் என்பதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ஜனநாயகன் படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பாபி தியோல் பற்றி பேசிய ஹெச்.வினோத் ‘பாலிவுட்டில் ஏன் பாபி தியோலை சரியாக பயன்படுத்தாம இருக்காங்கன்னு எனக்கு ஆச்சரியமா.. இருக்கு ஏன்னா ஒரு பக்கா ஆக்சன் மெட்டீரியல்.. வில்லன் கதாபாத்திரத்தை நாங்க எழுதும்போது அது திரையில் எப்படி வரும்னு எங்களுக்கே தெரியல.. ஆனா பாபி தியோல் அதை சரியா பண்ணினார்.
அவர் பாக்குறதுக்கு அமைதியா இருப்பார். ஆனால் ஸ்கிரீன்ல ஒரு மேஜிக் பண்ணிடுவார். எனக்கு ஹிந்தி பட வாய்ப்பு கிடைச்சா கண்டிப்பா அவரை வைத்து ஒரு பக்கா ஆக்சன் படம் எடுப்பேன்.. அந்தளவுக்கு அவரை புடிச்சிருக்கு’ என்று சொல்லியிருக்கிறார்.
