இவர் தான் எனக்கு ஃபேவரிட்… நீங்க கமல் ஃபேன் இல்லையா லோகி… பர்னிச்சரை உடைச்சிட்டீங்களே…

Published on: October 12, 2023
---Advertisement---

Lokesh Kanagaraj: லியோ ரிலீஸ் நெருங்கி இருக்கும் நிலையில் லோகேஷ் தன்னுடைய ஃபேவரிட்டையே மாற்றி விட்டார் போல. அதை அவர் ஓபனாகவே சொல்லியும் இருக்கிறார். தற்போது அந்த வீடியோ இணையத்திலும் வெளியாகி இருக்கிறது.

விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் லியோ. இப்படத்தினை செவன் ஸ்க்ரீன் ஸ்டியோஸ் நிறுவனத்தின் லலித்குமார் தயாரித்து வருகிறார். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் சண்டை காட்சிகளை கோரியோ செய்து இருப்பது அன்பறிவு. இந்த காம்போவே இப்படத்தின் மீது எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆரை நக்கலடித்த நாகேஷ்.. படத்தின் மூலம் பதில் சொன்ன பொன்மன செம்மல்!..

படத்தின் ரிலீஸ் நெருங்க நெருங்க சர்ச்சைகளும் வட்டமடித்து வருகின்றனர். ஒரு பக்கம் ஆடியோ ரிலீஸ் ரத்தானது. ஒரு பக்கம் டிரைலரில் விஜய் கெட்ட வார்த்தை பேசி அதை பலரும் தொடர்ச்சியாக விமர்சித்து வருகின்றனர். லோகி படங்களிலையே இல்லாத அளவுக்கு 5 பாடல் வரை இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

படத்தின் ப்ரோமோஷனுக்காக லோகேஷ் கனகராஜ் தொடர்ச்சியாக பலருக்கும் பேட்டி கொடுத்து வருகிறார். அந்த பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களும் வெளியாகி இருக்கிறது. தன்னுடைய கேரியரிலையே மொத்தமே 10 படங்களை மட்டுமே இயக்க போகிறேன் என்றும் லோகேஷ் தெரிவித்து இருக்கிறார்.

இதையும் படிங்க: ஒரே நாள்… ரயில் பயணத்திலேயே மனோரமா செய்த ஆச்சரியப்படும் சம்பவம்… அசத்திட்டீங்களே ஆச்சி..!

மேலும் ரஜினியின் 171வது படம், சூர்யாவினை வைத்து ரோலக்ஸ் திரைப்படம், கைதி 2, கமலை வைத்து விக்ரம் 3 என பல படங்கள் வரிசையில் இருக்கிறது. இந்நிலையில் பொதுவாகவே கமல் ரசிகர் தான் லோகேஷ் கனகராஜ் என்பதை பல மேடைகளில் சொல்வதை வழக்கமாக வைத்து இருந்தார். அதனால் விக்ரம் படத்தினை இயக்கும் போது அதை பெருமையாகவே நினைத்தாராம்.

அவர் ஆசைப்பட்டது போலவே ஃபேவரிட் நடிகரான அவருக்கு ஒரு மாஸ் ஹிட் படத்தினை கொடுத்தார். ஆனால் அவரிடம் சமீபத்திய பேட்டியில் உங்களுடைய ஃபேவரிட் கேரக்டர் யார் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு எல்லா கேரக்டரை பிடிக்கும். ஆனால் எனக்கு பிடித்தது ஜேடி தான் எனக் கூறி இருந்தார். மாஸ்டர் படத்தில் விஜய் நடித்த கேரக்டரின் பெயர் தான் ஜேடி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வீடியோவைக்காண: https://twitter.com/TheRoute/status/1712431003388826020

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.