Cinema News
அஜித் மாதிரியே விஜயையும் மாத்திட்டாங்க! இனிமேல் அவ்ளோதான் – கப்பலையே கவுத்திப்புட்ட கேப்டன்
Ajith – Vijay: இப்போது சினிமாவில் பேசு பொருளாக பார்க்கப்படுவது விஜயின் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நிறுத்தப்பட்டதை பற்றித்தான். அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த லியோ இசை வெளியீட்டு திடீரென நிறுத்தப்பட்டதற்கு திரையுலகமும் ரசிகர்களும் பெரும் அதிர்ப்தியில் இருக்கின்றனர்.
அதுவும் விஜய் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்தது. இதுவரை திரையிலேயே பார்த்து மகிழ்ந்த தன் தலைவனை வருடத்திற்கு ஒருமுறைதான் நேரில் பார்க்கும் ரசிகர்களுக்கு சொல்ல முடியாத மனவலியைத்தான் தந்திருக்கும்.
இதையும் படிங்க: மரம் சார்ந்த விவசாயமே ஒரே வழி – காவேரி பிரச்சனை குறித்து சத்குரு கருத்து
திரையில் பார்க்கும் விஜயை விட மேடையில் நேரடியாக அவர் எப்படி பேசுகிறார்? எந்த மாதிரி டான்ஸ் ஆடுகிறார் என்பதை பார்க்க ரசிகர்களுக்கு ஒருவித ஆர்வம் இருக்கும். அது இப்பொழுது இல்லையே என்று நினைக்கும் போது அனைவருக்குமே பெரிய அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.
இந்த நிலையில் சினிமா தயாரிப்பாளரான தனஞ்செயன் ஒரு சில தகவல்களை கூறினார். அதாவது இசை வெளியீட்டு விழா வைத்து அதன் மூலம் கிடைக்கும் பப்ளிசிட்டியை விட விழா ரத்தாகி கிடைத்த பப்ளிசிட்டி 200 மடங்கு. அதனால் இது மேலும் படத்திற்கு கூடுதல் பலம்தான் என்று கூறினார்.
இதையும் படிங்க: அடுத்த பொங்கலும் செம போர்!.. வரிசை கட்டியிருக்கும் 4 படங்கள்.. நாங்க ஊருக்கே போறோம் சிவாஜி!..
அதுமட்டுமில்லாமல் லலித் தனஞ்செயனுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் ஏன் விழாவை ரத்து செய்தீர்கள் என்று கேட்டாராம். அதற்கு டிக்கெட் டிமாண்ட்டை பற்றித்தான் லலித் கூறினாராம். ஆனால் அரசியல் அழுத்தம் இல்லை என்றும் தனஞ்செயன் கூறினார்.
மேலும் லலித்திடம் ஏற்கனவே தனஞ்செயன் ‘விஜய் விழாவை நேரு ஸ்டேடியத்திலோ சத்யம் சினிமாவிலோ நடத்த முடியாது. மதுரை தமுக்கம் மைதானம் அல்லது ஒய்.எம்.சி.ஏவில் நடத்தலாம். கிட்டத்தட்ட லட்சக்கணக்கானோர் கூடும் போது அது பட விழாவையும் தாண்டி விஜய் விழாவாக மாறியிருக்கும். அதனால் கொஞ்சம் யோசிங்க’ என்று கூறினாராம்.
இதையும் படிங்க: ‘லியோ’ ஆடியோ லாஞ்ச் நடக்காம போனதுக்கு நாங்கதான் காரணம்!.. தயாரிப்பாளர் பகீர் பேட்டி!..
ஆனால் லலித் அந்த மாதிரியான ஐடியாவிலேயே இல்லாததால் அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆனால் லலித் இப்படி செய்ததால் ஒரு வேளை படம் ரிலீஸாகி பெரிய ஒரு வரவேற்பை அதுவும் யாரும் எதிர்பார்க்காத ஒரு கலெக்ஷனை லியோ படம் பெற்று விட்டால் இனிமேல் விஜய் எந்தவொரு பட இசை வெளியீட்டு விழாவிற்கும் வரமாட்டார்.
அஜித்தை போலவே விஜய் அவர் சம்பந்தப்பட்ட எந்த விழாக்களிலும் கலந்து கொள்ள மாட்டார். ஏனெனில் இசை வெளியீட்டு விழா வைக்காமலேயே படம் இந்தளவுக்கு ஒரு வெற்றியை பெறும் போது ஏன் நாம் இனிமேல் கலந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணம் விஜய்க்கு ஏற்படும். அதற்கு லலித்தே முழு காரணம் என்று தனஞ்செயன் கூறினார்.
விஜயை ஒரு தவறான கண்ணோட்டத்திற்கு திசை திருப்பியதில் லலித்தே காரணமாகிவிட்டார் என்றும் தனஞ்செயன் கூறினார். இதை லலித்திடமே தனஞ்செயன் கூறினாராம். அதற்கு லலித் என்ன சார் இப்படி சொல்றீங்க? என கேட்டாராம்.