Connect with us
vijay

Cinema News

‘லியோ’ ஆடியோ லாஞ்ச் நடக்காம போனதுக்கு நாங்கதான் காரணம்!.. தயாரிப்பாளர் பகீர் பேட்டி!..

நாளை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த லியோ படத்தின் இசைவெளியீட்டு விழா நிறுத்தப்பட்டதை அறிந்து விஜய் ரசிகர்கள் உட்பட பிரபலங்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாலை வரை ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து கொண்டிருக்க இரவில் திடீரென லியோ இசை வெளியீட்டு விழா ரத்து என்ற ஒரு அறிவிப்பை படக்குழு அறிவித்தது.

ஆனால் இதற்கு பின்னனியில் அரசியல் அழுத்தங்கள் எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் அந்த இசை வெளியீட்டு விழா நின்று போனதற்கு நாங்கள் கொடுத்த நெருக்கடியும் ஒரு காரணம் என்று சினிமா பிரபல தயாரிப்பாளர் ஏ.எம். சௌத்ரி கூறியிருக்கிறார்.

2018-க்கு பதிலா ஆஸ்கருக்கு போக வேண்டிய தமிழ் படங்கள் எதுனு தெரியுமா? ஷாக் ஆயிடுவீங்க!..

அதாவது விஜய் மாணவர்களுக்கான ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசிய போது அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களை மட்டுமே குறிப்பிட்டு பேசியிருந்தார் என்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தலைவரை பற்றி ஏன் பேசவில்லை? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

cats

cats

இதை பற்றி ஏற்கனவே சமூக வலைதளத்தில் தான் கண்டனம் தெரிவித்ததாகவும் ஒரு வேளை ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசுவார் என்றும் எதிர்பார்த்திருந்தாராம். அதுமட்டுமில்லாமல் விஜய் மக்கள் இயக்க மன்றங்களில் இருக்கும் தலைமை நிர்வாகிகளிடம் கூட இதை பற்றி பேசினாராம்.

இதையும் படிங்க: 2018-க்கு பதிலா ஆஸ்கருக்கு போக வேண்டிய தமிழ் படங்கள் எதுனு தெரியுமா? ஷாக் ஆயிடுவீங்க!..

ஒரு வேளை ஆடியோ வெளியீட்டு விழாவிலும் பசும்பொன் தேவரை பற்றி விஜய் பேசவில்லை என்றால் பெரிய நெருக்கடியை கொடுப்போம் என்று சௌத்ரி கூறியிருந்தாராம். இந்த தகவல் கண்டிப்பாக புஸ்ஸீ ஆனந்த் வரைக்கும் சென்றதனால்தான் இசை வெளியீட்டு விழா ரத்தானது என்று கூறினார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஒரு தேசியத்தலைவர். எம்ஜிஆர் முதல் ஸ்டாலின் வரை முத்துராமலிங்க தேவருக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். விஜய் மட்டும் ஏன் அம்பேத்கரை வைத்து அரசியல் பண்ணவேண்டும் என நினைக்கிறாரா? என்று கேட்டிருக்கிறார்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆரை நக்கலடித்த நாகேஷ்.. படத்தின் மூலம் பதில் சொன்ன பொன்மன செம்மல்!..

மேலும் அவரை வளர்த்து விட்ட விஜயகாந்த் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லாதவர் சாதித் தலைவரான திருமாவளவன் பிறந்த நாளுக்கு மட்டும் வாழ்த்து சொல்வது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். ஒரு வேளை இசை வெளியீட்டு விழா நடந்து முத்துராமலிங்கத்தேவர் பெயரை மட்டும் விஜய் குறிப்பிடாமல் போயிருந்தால் அவர் நேர்கொள்ளும் விளைவுகளே வேறு மாதிரியாக இருந்திருக்கும் என கூறினார்.

அதாவது முத்துராமலிங்க தேவர் சமூகத்தில் இருக்கும் அனைவரும் அவர் படத்தை புறக்கணித்திருப்போம் என்று  கூறியிருக்கிறார். மேலும் லியோ படம் கண்டிப்பாக அடி வாங்கும் என்றும் இனிமேல் விஜய்க்கு அடிமேல் அடிதான் என்றும் தன் கோபத்தை வெளிப்படுத்தினார் சௌத்ரி.

இதையும் படிங்க: சிரிப்ப அடக்க முடியல!.. சந்திரமுகி 2வை வச்சு செய்யும் ரஜினி ரசிகர்கள்!.. அந்த டைனோசர் மீம் தான் ஹைலைட்!.

google news
Continue Reading

More in Cinema News

To Top