எம்.ஜி.ஆருக்காக சம்பளத்தை பாதியாக குறைத்த ஹாலிவுட் நடிகர்!.. அந்த படம் மட்டும் வந்திருந்தா!..

எம்.ஜி.ஆர் ஒரு நடிகர் மட்டுமல்ல. சிறந்த இயக்குனரும் கூட. எனவே, ஒவ்வொரு காட்சியும் எப்படி வரவேண்டும் என்பது அவருக்கு தெரியும். படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் வர தாமதமானால் அவரே அந்த காட்சியை எடுத்துவிடுவார். அந்த அளவுக்கு தொழில் நுட்ப விஷயங்களையும் தெரிந்து வைத்திருந்தார்.
சிறந்த இசை ஞானமும் கொண்டவர். அதனால்தான் அவரின் படங்களில் இடம் பெற்ற பாடல்கள் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது. தனக்கு பிடித்தமான மெட்டு வரும் வரை இசையமைப்பாளரை விடமாட்டார். அதேபோல், பாடல் வரிகளையும் சிறப்பாக வாங்கிவிடுவார்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் போட்ட பிச்சைலதான் வாழ்ந்துக்கிட்டு இருக்கேன்… இப்படி சொன்ன பிரபலம் யார் தெரியுமா?…
எம்.ஜி.ஆர் முதலில் தயாரித்து இயக்கிய திரைப்படம் நாடோடி மன்னன். இப்படம் சூப்பர் ஹிட். இதுதான் எம்.ஜி.ஆரை ரசிகர்களிடம் அதிக அளவில் கொண்டு சேர்த்தது. அதன்பின் பல வருடங்கள் கழித்து எம்.ஜி.ஆர் தயாரித்து இயக்கிய படம் உலகம் சுற்றும் வாலிபன். இந்த படத்தில் எம்.ஜி.ஆர் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா என பல நாடுகளிலும் நடந்தது. அதிக பொருட்செலவில் இப்படத்தை உருவாக்கினார் எம்.ஜி.ஆர். இந்த படத்தை வெளிவராமல் தடுக்க அப்போதைய முதல்வர் கருணாநிதி பல வகைகளிலும் முயற்சி செய்ததாக சொல்லப்பட்டது. ஆனாலும், படத்தை வெளியிட்டு வெற்றி கண்டார் எம்.ஜி.ஆர்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் ரத்தம் பட்ட மேஜை, நாற்காலிகள்!. முதல்வரானதும் பொன்மன செம்மல் செய்தது இதுதான்!..
இந்த படத்தின் தொடர்ச்சியாக கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ என்கிற படத்தை எடுக்க நினைத்தார் எம்.ஜி.ஆர். அப்போது ஹாலிவுட்டில் பிரபலமாக இருந்த நடிகர் சிட்னி பைட்டரை இப்படத்தில் வில்லனாக நடிக்க வைக்க ஆசைப்பட்டார் எம்.ஜி.ஆர். ஆனால், 40 மில்லியனை சம்பளமாக கேட்டார் சிட்னி பைட்டர். ஆனால், எம்.ஜி.ஆர் யார் என்பது அவருக்கு தெரிய வந்ததும் தனது சம்பளத்தை பாதியாக குறைத்து கொண்டார்.
அதோடு, ‘போக வர எப்படி உங்களுக்கு வசதி செய்து கொடுக்க வேண்டும்?’ என கேட்க ‘எதற்காக நீங்கள் செலவு செய்ய வேண்டும். அதுதான் எல்லாம் சம்பளத்தில் கொடுத்துவிட்டீர்களே’ என ஆச்சர்யப்படுத்தினார் சிட்னி பைட்டர். ஆனால், எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆகிவிட்டதால் அப்படத்தை அவரால் எடுக்க முடியவில்லை. இல்லையெனில் சீக்வெல் என சொல்லப்படும் தொடர்ச்சி படத்தை தமிழில் முதலில் எடுத்தது எம்.ஜி.ஆராகவே இருந்திருக்கும்.