கமல் குடும்பத்துக்கு ‘ஹாசன்’ பெயர் எப்படி வந்தது தெரியுமா?!.. அடடே ஆச்சர்ய தகவல்!...

by சிவா |   ( Updated:2023-10-06 03:14:11  )
kamal
X

kamalhaasan: பொதுவாக பல ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரள நடிகர்கள், நடிகைகளின் பெயர்களுக்கு பின்னால் அவர்களின் குடும்ப பெயர் இருக்கும். ஆந்திரா பக்கம் போனால் ஷெட்டி, ரெட்டி என வரும். அதேபோல், கேரள பக்கம் போனால் பல நடிகைகளின் பெயருக்கு பின்னால் மேனன் வரும்.சிலர் மட்டுமே தங்களின் பெயர்களை மட்டுமே போட்டுக்கொள்வார்கள்.

ரஜினி கூட கெய்க்வாட் என்கிற குடும்ப பெயரை கொண்டவர்தான். அவரின் நிஜப்பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட். ஆனால், ரஜினிகாந்த் என்று மட்டுமே அவர் தன்னை அடையாளப்படுத்திகொண்டார். ஆனால், கமல் எப்போதும் தனது முழுப்பெயரையும் கமல்ஹாசன் என்றே பதிவிடுவார். அவர் நடிக்கும் படங்களிலும் அவரின் பெயர் அப்படித்தான் வரும்.

இதையும் படிங்க: என் வீட்டு பெட்ரூமை நீங்க ஏன் எட்டி பாக்குறீங்க…? நடிகைக்காக கோபத்தில் எகிறிய கமல்ஹாசன்… ஸ்பெஷலோ..!

போஸ்டர்களிலும் கூட கமல்ஹாசன் என்றே அச்சிடப்பட்டிருக்கும். அவரின் மகள் ஸ்ருதிஹாசன். அக்‌ஷராஹாசன் என்பது எல்லோருக்கும் தெரியும். கமல்ஹாசன் பரமக்குடியை சேர்ந்தவர். இவரின் குடும்பத்திற்கும் ஹாசன் என்கிற பெயருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

அப்படி இருக்கும்போது இந்த ‘ஹாசன்’ எப்படி வந்தது என்கிற சந்தேகம் பலருக்கும் உண்டு. அது எப்படி உருவானது என்பது பற்றி தெரிந்துகொள்வோம். கமலின் அப்பா சீனிவாசன். அந்த காலத்தில் சீனிவாச ஐயங்கார் என அழைப்பார்கள். அவர் யாஹூப் ஹாசன் என்கிற இஸ்லாமியரை தனது குருவாக ஏற்றுக்கொண்டவர்.

இதையும் படிங்க: இத்தனை பெண்களுடன் காதலா? கேள்வி கேட்ட நிரூபருக்கு சாட்டையடி பதில் கூறிய கமல்

அதனால் தனது முதல் மகனுக்கு சாருஹாசன் எனவும், 2 வது மகனுக்கு சந்திரஹாசன் எனவும், 3வது மகனுக்கு கமல்ஹாசன் எனவும் பெயர் வைத்திருக்கிறார். கமலின் அப்பா சீனிவாசன் அந்த காலத்திலேயே ஒரு இஸ்லாமியரை குருவாக ஏற்றுக்கொள்ளும் பகுத்தறிவுவாதியாக இருந்தார்.

அதனால்தான் அவரின் 3 மகன்களுமே கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகவாதிகளா, பகுத்தறிவாதிகளாக வளர்ந்தனர். கமல் நடித்த பல திரைப்படங்களில் கடவுளை மறுத்தும், விமர்சித்தும் மனித நேயத்தையும், சக மனிதன் மீது காட்டும் அன்பையும் உயர்த்தியும் பேசியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வாசலில் காத்து கிடந்த ரஜினி… பொறுமையாக தூங்கி எழுந்து வந்த கமல்ஹாசன்… அதுக்குனு இப்டியா?

Next Story