More
Read more!
Categories: Cinema News latest news

விஷாலை ஹீரோவாக்க போடப்பட்ட பக்கா மாஸ்டர் ப்ளான்! இப்படி யாரும் யோசிச்சிருக்க மாட்டாங்க

Actor Vishal: தமிழ் சினிமாவில் எப்போதுமே கருப்பு நிறத்திற்கு மவுசு அதிகம் தான். ரஜினிகாந்தில் இருந்து தொடங்கி விஜயகாந்த் தற்போது விஷால் வரை தமிழ் சினிமாவில் முதன்மையான இடத்தில் இருந்து வந்தவர்கள் தான். அந்த வகையில் சினிமா துறையில் நுழைந்த குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுக்கு இணையான ஒரு அந்தஸ்தை பெற்று விளங்கினார் விஷால்.

இவர் முதலில் நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். செல்லமே என்ற படத்தின் மூலம் முதன் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகமான விஷால் அதனைத் தொடர்ந்து சண்டக்கோழி, திமிரு போன்ற படங்களில் நடித்து ஒரு ஆக்சன் ஹீரோவாக குறுகிய காலத்திலேயே மக்கள் மனதில் இடம் பிடித்தார். அது மட்டுமல்லாமல் அர்ஜுன் நடித்த வேதம், ஏழுமலை போன்ற படங்களிலும் உதவி இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார்.

இதையும் படிங்க: வேட்டையன் வெறும் கபாலி இல்லையாம்… அதையும் தாண்டி..! வில்லன் நடிகர் கொடுத்த சூப்பர் அப்டேட்…

எத்தனையோ படங்களில் நடித்தாலும் விஷாலுக்கு ஒரு தனித்துவமான படமாக அமைந்தது பாலா இயக்கத்தில் வெளிவந்த அவன் இவன் திரைப்படம். அந்த படத்தில் ஒரு வித்தியாசமான கேரக்டரில் அதுவும் மாறு கண் வேடத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் விஷால். அப்படி நடித்ததன் விளைவாகத்தான் இன்று வரை அதன் பின் விளைவுகளை சந்தித்து வருகிறார். இந்த நிலையில் செல்லமே படத்தின் தயாரிப்பாளர் ஞானவேலு விஷாலை ஹீரோவாக ஆக்குவதற்கு அவர் போட்ட மாஸ்டர் பிளான் பற்றி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

விஷாலிடம் பேசிய ஞானவேலு என் படத்தில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என கேட்டு இருக்கிறார். அதற்கு விஷால் என் அப்பாவிடம் கேளுங்கள் என கூற நேராக விஷால் அப்பாவை சந்தித்து ஞானவேலு பேசியிருக்கிறார். நீங்கள் எனக்கு பைனான்ஸ் செய்தால் என் பேனரில் உங்கள் மகனை நான் ஹீரோவாக நடிக்க வைக்கிறேன் என ஞானவேலு கேட்க அதற்கு விஷாலின் தந்தை அந்த காலத்தில் உள்ளது போல 75 லட்சத்தில் படம் பண்ண முடியுமா என கேட்டாராம்.

இதையும் படிங்க: அண்ணன் வரார் வழி விடு… புஷ்பா2 படத்தை அசால்ட்டாக தட்டி தூக்கிய கோட்…

அதற்கு ஞானவேலு இந்த தொகையில் நீங்களோ நானோ படம் எடுக்க முடியாது. இந்த படத்தை பொறுத்த வரைக்கும் ஹீரோவை தவிர மற்ற அனைவரும் தரமாக இருக்க வேண்டும். ஹீரோ மட்டும் வித்தியாசமாக புதுமையாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் ரசிகர்கள் மத்தியில் உங்கள் மகன் சீக்கிரமாக இடம் பிடிப்பார் எனக் கூறி விஷாலின் தந்தையை சம்மதிக்க வைத்திருக்கிறார்.

ஞானவேலு சொன்னதை போல அப்போது பீக்கில் இருந்த ரீமாசென்னை ஹீரோயின் ஆகவும் காமெடியில் மார்க்கெட் உள்ள நடிகராக சந்தானத்தையும் நடிக்க வைத்திருக்கிறார். அதன் பிறகு ஒரு பெரிய தொகையில் இந்த படத்தை எடுத்து பெரிய அளவில் வெற்றியும் பெற்றார் ஞானவேலு. இப்படித்தான் விஷாலை ஹீரோவாக்கினேன் என ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க: ஜெயிலர் 2-வுக்கு வேற லெவலில் ஸ்கெட்ச் போடும் நெல்சன்!.. ரசிகர்களுக்கு ஃபுல் டிரீட்தான்!..

Published by
Rohini

Recent Posts