கமல்-ஹெச்.வினோத் படத்தின் கதை முக்கிய பிரபலத்தின் பயோபிக்காம்!.. ஆனால் இதில் ஒரு ட்விஸ்ட்…

by Akhilan |   ( Updated:2024-01-30 14:59:50  )
கமல்-ஹெச்.வினோத் படத்தின் கதை முக்கிய பிரபலத்தின்  பயோபிக்காம்!.. ஆனால் இதில் ஒரு ட்விஸ்ட்…
X

Kamal vs HVinoth: ஹெச்.வினோத் இயக்கத்தில் கமல் நடிக்க இருக்கும் திரைப்படத்தில் தற்போது பெரிய பிரேக் எடுத்து இருக்கும் நிலையில் அப்படம் குறித்த ஆச்சரிய தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

நேர்கொண்ட பார்வை, துணிவு, வலிமை உள்ளிட்ட ஹிட் படங்களை இயக்கியவர் இயக்குனர் ஹெச்.வினோத். அவரின் தொடர் வெற்றியால் தன்னுடைய அடுத்த படத்துக்கு ஹெச்.வினோத்தை ஒப்பந்தம் செய்தார் கமல்ஹாசன். இப்படத்தினை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்தது.

இதையும் படிங்க: ஒரு கிளாஸ் விஸ்கி கையில இருந்தா தினமும் ஹனிமூன்தான்!.. ஓப்பனாக பேசிய ரஜினி…

ஆனால் படத்தின் முதற்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கிய நிலையில் பல தகவல்கள் கசிந்தது. முதலில் மர்மயோகி என பெயர் வைக்கப்பட இருந்த இப்படம் போலீஸ் கதையாக இருக்கும் எனக் கூறப்பட்டது. பின்னர் ஆனால் அந்த கதைக்கு கமல்ஹாசன் ஒப்புக்கொள்ளவில்லையாம். ஆனால் கமல்ஹாசன் மணிரத்னத்தின் தக் லைஃப் படத்தின் வேலைகளில் பிஸியாகி விட்டாராம்.

அப்படத்தில் அவருக்கு கெட்டப் இருப்பதால் அது லீக்காக கூடாது என்பதால் அதே கெட்டப்பில் வேறு படத்தில் நடிக்க முடியாது என்பதால் ஹெச்.வினோத் படத்தினை தள்ளி வைத்தாராம். இதை தொடர்ந்து அன்பறிவு இயக்கும் படத்தில் நடிக்கும் போது ஹெச்.வினோத் படத்திலும் ஒரே நேரத்தில் நடித்து விடலாம் என்ற ஐடியாவில் கமல்ஹாசன் இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது ஒரு முக்கிய அப்டேட் ரிலீஸாகி இருக்கிறது.

இதையும் படிங்க: ரஜினியோடு நேரடியாக போட்டி போட்ட பாக்கியராஜ் படங்கள்… அட இந்த படமும் லிஸ்ட்ல இருக்கா!…

அதாவது, மறைந்த விவசாயி நெல் ஜெயராமனின் பயோபிக்காக தான் இப்படத்தினை எடுக்க ஹெச்.வினோத் திட்டமிட்டு இருக்கிறாராம். ஜெயராமன் தமிழகத்தில் இருந்த பாரமரிய நெல்களை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக ஹெச்.வினோத் படங்களில் கமர்ஷியல் கொஞ்சம் கம்மியாகவே இருக்கும். அதனால் இப்படத்தினையும் அப்படியே எடுக்கலாம் என்றாராம்.

ஆனால் கமல்ஹாசன் படத்தில் கொஞ்சம் கமர்ஷியல் மற்றும் கிளை கதைகளை சேர்க்கலாம் எனவும் சொல்லினாராம். இதனால் அதன் வேலைகள் நிறைய எடுக்கும் என்பதால் தக் லைஃப் முடிக்க கமல் சென்று விட்டராம். தற்போது ஹெச்.வினோத்தும் தனுஷ் படத்தில் இணைந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆத்தாடி இத்தனை கோடியா?!.. ஜெயிலரை தாண்டிய லால் சலாம்!.. செம ஜாக்பாட்தான்!…

Next Story