Vijay Sethupathi: நடிகர் விஜய் சேதுபதி தான் இனி இந்த கதாபாத்திரங்களை செய்யவே மாட்டேன் என திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறார். இதனால் அவர் மீண்டும் தன்னுடைய ரூட்டுக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சின்ன சின்ன ரோலில் நடித்து வந்தவர் விஜய் சேதுபதி. கூத்து பட்டறையில் கணக்கு வழக்கு எழுதி வந்த விஜய் சேதுபதிக்கு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் அறிமுகம் கிடைத்தது. அவர் நாளைய இயக்குனர் ரியாலிட்டி ஷோவில் இயக்கிய குறும்படங்களில் நடிக்க விஜய் சேதுபதிக்கு வாய்ப்பு கொடுத்தார்.
இதையும் படிங்க: காசு இருந்தா என்ன வேணாலும் பேசுவீங்களா?… ஞானவேல்ராஜாவை கிழித்தெடுத்த எஸ்.வி.சேகர்…
இதில் கொஞ்சம் கிடைத்த அறிமுகத்தினை வைத்து நடுவில கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தில் நடித்தார். அப்படம் மிகப்பெரிய வெற்றி இல்லை என்றாலும் பலரிடத்தில் விஜய் சேதுபதியை கொண்டு சென்றது. இதை தொடர்ந்து பிட்சா படத்தின் மூலம் தானும் ஒரு நடிகன் என்பதை பதிய வைத்தார்.
ஒரே வருடத்தில் 4 படங்கள் வரை தொடர்ந்து நடித்துவந்தார் விஜய் சேதுபதி. நான் நடிக்க வந்து இருக்கேன். இது என் தொழில் என்பதை தன்னுடைய நிறைய பேட்டிகளில் சொல்வதை வழக்கமாக வைத்து இருந்தார். ஆனால் அவருக்கு ஹீரோ இமேஜ் கொடுத்த புகழை விட விக்ரம் வேதாவில் செய்த நெகட்டிவ் ரோல் மேலும் அங்கீகாரத்தினை கொடுத்தது.
இதையும் படிங்க: நீங்க உருட்டுங்க… மீண்டும் கல்யாண சீன் வச்சிராதீங்கப்பா.. பாக்கியலட்சுமி டீமை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..!
இதை தொடர்ந்து ரஜினிக்கு வில்லனாக பேட்ட படத்திலும், விஜயிற்கு வில்லனாக மாஸ்டர் படத்திலும் நடித்தது விஜய் சேதுபதியின் கேரியரை தூக்கி கொடுத்தது. தொடர்ச்சியாக அவருக்கு நிறைய வில்லன் ரோலே வந்து கொண்டு இருந்தது. சமீபத்தில் ஜவான் படத்தில் கூட வில்லனாக நடித்து இருந்தார்.
இந்நிலையில் சில படங்களின் ஹீரோக்கள் கேட்டுக்கொண்டதாலே வில்லனாக நடித்தேன். சிலர் நிறைய கட்டுப்பாடுகள் சொல்கின்றனர். ஹீரோவின் இமேஜை கெடுக்காமல் பார்க்க வேண்டும் என்கின்றனர். நிறைய வில்லன் ரோல் எடிட்டிங்கில் போய்விடுவதால் தான் இனி வில்லனாக நடிக்க போவது இல்லை என விஜய் சேதுபதி திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: அஜித் இப்படி சொல்லுவாருனு நினைச்சு கூட பார்க்கல! ‘நாடோடி’ பட நடிகை பகிர்ந்த சூப்பர் தகவல்
தமிழ்த்திரை உலகில்…
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…