Cinema News
படம் ப்ளாப் எனத் தெரிந்தும் இத்தனை படங்களில் நடித்த கார்த்தி..! ஆனா அதுக்கு அவர் சொல்லும் காரணம் இருக்கே?
Karthi Sivakumar: கார்த்தி சிவகுமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜப்பான் திரைப்படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. அவரின் கேரியரிலேயே மோசமான படம் என்ற அடையாளத்தினையும் பெற்றுள்ளது. மோசமான கதைகளை கார்த்தி தேர்வு செய்யும் போது ஒரு சொல்லும் லாஜிக் குறித்த அடே தகவல் தான் தற்போது லீக்காகி இருக்கிறது.
பிரபல நடிகர் சிவகுமாரின் இரண்டாம் மகன் தான் கார்த்தி. முதலில் உதவி இயக்குனராக இருந்தவரை அமீர் தன்னுடைய பருத்திவீரன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகப்படுத்தினார். முதல் படமே மிகப்பெரிய ஹிட்டாக அமைய கார்த்தி நடிகராக அங்கீகாரம் பெற்றார்.
இதையும் படிங்க: பொன்னம்பலம் அடித்ததில் மருத்துவமனையில் அட்மிட் ஆன கேப்டன்!.. இவ்வளவு நடந்திருக்கா?!…
அடுத்து அவர் நடிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன், நான் மகான் அல்ல, சிறுத்தை, பையா என எல்லா படங்களுமே ஹிட் லிஸ்ட்டில் சேர்ந்தது. இதனால் கார்த்தியின் சினிமா கேரியர் உச்சத்தில் ஏறியது. ஆனால் விதி யாரை விடும் என்பதற்கு ஏற்ப சகுனி படத்தினை தேர்வு செய்து நடித்தார்.
படம் மோசமான தோல்வி படமாக அமைந்தது. ஆல் இன் ஆல் அழகுராஜா, தேவ், பிரியாணி என அடுத்தடுத்த படங்களும் தோல்வி லிஸ்ட்டில் இணைந்தது. அப்படங்களில் கதையே சரியில்லையே இதை எப்படி கார்த்தி ஓகே செய்தார் என பலருக்குமே ஆச்சரியமும் இருந்தது.
ஆனால் அதற்கு அடுத்த நிறைய நல்ல படங்களில் நடித்து வந்த கார்த்தி. மீண்டும் ஜப்பான் படம் மூலம் தோல்வி ரூட்டுக்கு திரும்பி இருக்கிறார். இதுகுறித்து பேசி இருக்கும் பிஸ்மி, இந்த படங்களின் கதையை ஏன் தேர்வு செய்தீர்கள் என கார்த்தியை கேட்கும் போது ஒரு பதில் சொல்வாராம்.
இதையும் படிங்க: எல்லார் வாழ்க்கையில் மொத்தமாக பிரச்னையை பத்த வச்சாச்சு போல.. சிறகடிக்க ஆசை ஷாக்..!
இந்த கதைகளில் எல்லாம் என்னால் இந்த வயதில் தான் நடிக்க முடியும். வயசாகி நடிக்க முடியாது தானே. அதனால் தான் நடிச்சேன். அது ப்ளாப் தான் ஆகும் என எனக்கும் தெரியும் என்றாராம். ஒரு பெரிய நடிகராக இருக்கும் கார்த்தி தயாரிப்பாளரை யோசிக்காமல் இப்படி சொல்லலாமா? இந்த ஜப்பான் படத்தின் தயாரிப்பாளருக்கே 30 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக பிரபல திரை விமர்சகர் பிஸ்மி தெரிவித்து இருக்கிறார்.