பிக்பாஸ் கூப்பிட்டாங்க,, முடியாதுனு சொல்லிட்டேன்.. குக் வித் கோமாளி பிரபலம் கொடுத்த ஷாக்…

by Akhilan |   ( Updated:2024-08-26 11:28:40  )
பிக்பாஸ் கூப்பிட்டாங்க,, முடியாதுனு சொல்லிட்டேன்.. குக் வித் கோமாளி பிரபலம் கொடுத்த ஷாக்…
X

#image_title

CookWithComali: பல சின்னத்திரை ரசிகர்களின் சமீபத்திய எதிர்பார்ப்பு வரும் பிக் பாஸ் தமிழ் சீசனில் கலந்து கொள்ள போகும் போட்டியாளர்கள் யாராக இருக்கும் என்பதுதான். அந்த வகையில் தனக்கு வந்த வாய்ப்பை குக் வித் கோமாளி பிரபலம் ஒருவர் நிராகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

விரைவில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 ஒளிபரப்பப்பட இருக்கிறது. ஏற்கனவே இந்த சீசனில் இருந்து கமல்ஹாசன் விலகி இருக்கும் நிலையில் அவரின் இடத்தை நடிகர் விஜய் சேதுபதி நிரப்புவார் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் நாளுக்கு நாள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க: நடிகையின் பாலியல் புகார்!.. ரியாஸ்கான் பதில் இதுதான்!.. கட்டதுரைக்கு கட்டம் சரியில்ல!…

இந்நிலையில் பல முக்கிய பிரபலங்களிடமும், தற்போது வைரலில் இருக்கும் பிரபலங்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அந்த வகையில் செய்தி வாசிப்பாளராக இருந்து தற்போது நடிகையாக இருக்கும் திவ்யா துரைசாமியிடம் பிக் பாஸ் தமிழ் சீசனில் கலந்து கொள்ள கேட்டிருப்பதாக கூறப்படுகிறது.

divya

இது குறித்த அவர் கூறும் போது, நான் ரொம்ப சீரியசான கேரக்டர். என்னிடம் சிரித்து பேசினால் மட்டுமே நானும் சிரிப்பேன். மற்றபடி நான் எப்போதுமே சீரியஸ் ஆக இருப்பேன்.. எனக்கு பிக் பாஸ் வீடு செட் ஆகாது. அதனால் அங்கு என்னால் 100 நாட்கள் சென்று இருக்க முடியாது என பிக் பாஸ் வாய்ப்பை நிராகரித்து விட்டதாக குறிப்பிட்டிருக்கிறார்.

இதையும் படிங்க: இப்டி டிரெஸ் போட்டு மனச கெடுக்குறாரே மாளவிகா!.. சீயானும் செம ஸ்டைலா இருக்காரே!…

தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து வந்த திவ்யா துரைசாமி பின்னர் சமூக வலைதளத்தில் வைரல் ஆகினார். தொடர்ந்து நடிப்பிலும் தன்னுடைய ஆர்வத்தை செலுத்தி முக்கிய திரைப்படங்களிலும் நடித்து வந்தார். அந்த வகையில் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் மாரி திரைப்படத்தில் முக்கிய இடம் ஏற்று இருக்கிறார்.

இது மட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் திவ்யா துரைசாமி சிறப்பாக செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது டாப் 5க்குள் சென்றிருக்கும் திவ்யா துரைசாமி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story