16 வருஷம் கறி சோறு போட்ட மனுஷன்.. தப்பா பேசுனா சும்மா இருப்பேனா?..வடிவேலுவை வச்சி செஞ்ச பிரபலம்..
தமிழ் சினிமாவில் கவுண்டமணி , செந்தில் இவர்கள் காலத்தில் ஒரு சாதாரண ஆர்ட்டிஸ்ட்டாக நுழைந்தவர்தான் நடிகர் வடிவேலு. நடிகர் ராஜ்கிரண் மூலமாக சினிமாவில் அறிமுகமானார் வடிவேலு. கவுண்டமணி, செந்தில் இவர்களுடன் பல படங்களில் ஒரு துணை நடிகராக நடித்திருக்கிறார். அந்த நேரத்தில் எல்லாம் கவுண்டமணியால் பல சமயங்களில் வடிவேலு புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்.
தொடர்ந்து பல படங்களில் தன் திறமையை காட்டிய வடிவேலு ஒரு கட்டத்தில் வடிவேலு இல்லாத படங்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு அபார வளர்ச்சி அடைந்தார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் சினிமாவை தன் கட்டுக்குள் வைத்திருந்தார்.
நடிப்பை பொறுத்தவரைக்கும் வடிவேலு ஒரு மகாநடிகன் என்றே சொல்லலாம். காட்சிகளுக்கு ஏற்ப தன் முகபாவனைகளை மாற்றுவது, பாடி ஷேப்பை மாற்றி நகைச்சுவை செய்வது என அனைவரையும் ரசிக்க வைத்தார் வடிவேலு.
வடிவேலு நன்கு வளர்ந்த சமயம் எப்பவும் வடிவேலு குரூப் என்ற சக கலைஞர்கள் அவரை சுற்றியே இருப்பார்கள். போண்டாமணி, பெஞ்சமின்,முத்துக்காளை, சாரப்பாம்பு சுப்புராஜ் என சக நடிகர்களால் ஓரளவு வடிவேலுவின் காமெடி சினிமாவில் எடுபட்டது. ஆனால் அவர்களை சரியான முறையில் வடிவேலு தக்க வைக்கவில்லை.
வடிவேலுவின் குணம் எப்படி என்றால் தன்னை விட யாரேனும் பாராட்டையோ ஸ்கோரோ பண்ணுகிறார்கள் என்றால் அவர்களின் கெரியர் அவ்ளோதான். அந்த வகையில் தான் வடிவேலுவுடன் இருந்த அனைத்து சக நடிகர்களும் அவரை விட்டு பிரிந்து சென்றிருக்கின்றனர். இந்த நிலையில் காமெடி நடிகர் சாரப்பாம்பு சுப்புராஜ் வடிவேலுவை பற்றி ஒரு தகவலை கூறினார்.
ஆரம்பத்தில் விஜயகாந்திற்கும் வடிவேலுவிற்கும் ஒரு நல்ல நட்பு இருந்து வந்திருக்கிறது. ஒரு சில படங்களில் கூட விஜயகாந்துடன் இணைந்து வடிவேலு பணியாற்றியிருக்கிறார். 2010 ஆம் ஆண்டும் விஜயகாந்தை பற்றி ஒரு அரசியல் மேடையில் வடிவேலு கண்டபடி பேசினார். அதில் இருந்து தான் வடிவேலுவை தனக்கு பிடிக்காமல் போனது என சாரப்பாம்பு சுப்புராஜ் கூறினார்.
மேலும் மறு நாளே வடிவேலுவிடம் இதை பற்றி கேட்டு அவரை எச்சரித்தும் வந்தேன் என்றும் கூறினார். ‘கிட்டத்தட்ட 16 வருஷம் விஜயகாந்த் கையால் கறி சோரு சாப்பிட்டிருக்கேன். நான் மட்டும் இல்லை, சினிமாவில் பல பேர் கேப்டனால் பலனடைந்தவர்கள்தான். விஜயகாந்த் ரூமிற்கு வருவார். அப்போது செந்தில் ஒரு பக்கம், ராவுத்தர் ஒரு பக்கம், நான் ஒரு பக்கம் என சாப்பிட்டு விட்டு அங்காங்கே படுத்திருப்போம்,
இதையும் படிங்க : விஜயகாந்திடம் அடி வாங்கிய ராவுத்தர்!.. ரகசியத்தை பகிர்ந்த காமெடி நடிகர்..
விஜயகாந்த் பார்த்து எங்களை தொந்தரவு செய்யக்கூடாது என ஒரு ஓரமாக துண்டை விரித்து படுத்துக் கொள்வார்.காலையில் ஆப்பம் , பாயா, மட்டன், மதியம் தல கறி, கோழி, மீன், பறப்பது, நீந்துவது என அனைத்து வகை உணவு, இரவும் அதே போல் அசைவ உணவுதான், இப்படி சாப்பிட்டிருக்கிறோம், இப்படி பட்ட மனுஷனை தப்பா பேசுனா சும்மா இருப்பேனா? வடிவேலுவை அடிக்க போயிட்டேன்’ என சுப்புராஜ் கூறினார்.