இனிமே அத செய்ய மாட்டேன்.. பிக்பாஸ் வெற்றிக்கு பின் முடிவெடுத்த அசீம்... இதெல்லாம் நடக்குமா?!..
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்காத ஆளே இல்லை என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவருகிறார். இதுவரை 6 சீசன்கள் முடிவடைந்துள்ளது. அடுத்ததாக ஏழாவது சீசன் குறித்த ப்ரொமோ நேற்று வெளியானது.
இதற்காக ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் வெற்றியாளரான அசீம், அதற்கடுத்து எந்த நிகழ்ச்சிகளிலும், சீரியல்களிலும் பங்கேற்கவில்லை. அவர் எங்கு இருக்கிறார் என்ன செய்கிறார் என்றே யாருக்கும் தெரியாமல் இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு சீரியல்களில் நடித்துக்கொண்டிருந்தார் அசீம்.
இதையும் படிங்க- கடலிலேயே 7 போட்டு கலக்கிய கமல்!.. எத்தனை படம் இருந்தாலும்!.. பிக் பாஸ் சீசன் 7 தான் முக்கியமாம்!..
தெய்வம் தந்த வீடு, பிரிவோம் சந்திப்போம், புவே உனக்காக, பகல் நிலவு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தான அசீமுக்கு ஒரு மகன் உள்ளார். பிக் பாஸ்உ நிகழ்ச்சியின் போது, அடிக்கடி கோபப்படுவது, எல்லோரிடமும் சண்டை போடுவது, அடுத்த நாளே மன்னிப்பு கேட்பது என வித்யாசமாக விளையாடி வந்தார் அசீம்.
அதனாலேயே அவர் இயல்பாக இருக்கிறார் என்று அவருக்கு ரசிகர்கள் பலர் வாக்களித்து வெற்றி பெற வைத்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்றால், அதில் கிடைக்கும் பணத்தை நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்துவேன் என்று கூறியிருந்தார் அசீம்.
அதே போல, பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பிறகு தற்போது ஒரு தொண்டு நிறுவனத்தை தொடங்குவதற்கான வேலைகளில் அவர் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அடுத்த சீசனே வரப்போகிறது ஆனால், அசீம் என்ன செய்துகொண்டிருக்கிறார். எந்த சீரியல்களிலும் நடிக்கவில்லையே என்று அனைவரும் யோசித்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் அசீம் இனி சீரியல்களில் நடிக்க வேண்டாம். சினிமாவில் மட்டும் நடிக்கலாம் என்று முடிவெடுத்துவிட்டாராம். அதேபோல ஒரு படத்திலும் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க- பிக் பாஸ் சீசன் 7க்கு ரெடியான நெல்சன் பட நடிகை!.. பெட்டில் சும்மா என்னம்மா சூடா இருக்காரு!..