Categories: latest news

கடைசி முயற்சியில் விடாமுயற்சி! இது மட்டும் வொர்க் அவுட் ஆகலனா படம் அரோகராதான்..

Vidamuyarchi: நேற்றிலிருந்து விடாமுயற்சி திரைப்படம் கங்குவா திரைப்படமும் தீபாவளிக்கு ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆக போகின்றன என்ற ஒரு செய்தி வெளியானதிலிருந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. கிட்டத்தட்ட 21 வருடங்களுக்கு பிறகு அஜித் சூர்யா இவர்களின் படங்கள் ஒரே தேதியில் ரிலீஸ் ஆகப்போகின்றன என்பதால் இந்த எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது.

ஆனால் பிரபல சினிமா தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் விடாமுயற்சி படம் குறித்து சில முக்கிய தகவல்களை பகிர்ந்திருக்கிறார். அஜித் இப்போது குட் பேட் அக்லி திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது இரண்டு வார காலம் பிரேக் எடுப்பதற்காக சென்னை வந்துள்ளார் என்ற செய்தியை தனஞ்செயன் கூறியதோடு.

இதையும் படிங்க: சிவாஜிக்கு ‘நடிகர் திலகம்’ பட்டம் கொடுத்தது யாருன்னு தெரியுமா? இவ்ளோ விஷயங்கள் நடந்திருக்கா?

இந்த மாதம் 24 ஆம் தேதியிலிருந்து அஜித் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளப் போகிறார் என்ற ஒரு தகவலையும் பகிர்ந்திருக்கிறார். இதற்கிடையில் விடாமுயற்சி குறித்து மகிழ்திருமேனி இடம் கேட்டபோது ‘ நான் ரெடியாகத்தான் இருக்கிறேன். அஜித் தரப்பிலும் எந்த ஒரு மறுப்பும் இல்லை. அவரும் ரெடியா தான் இருக்கிறார். ப்ரொடக்ஷன் தரப்பிலிருந்து தான் சரியான பதிலை சொல்ல வேண்டும்’ என மகிழ் திருமேனி சொன்னதாக தனஞ்ஜெயன் கூறியிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் அஜித்தும் குட் பேட் அக்லி படக்குழுவிடம் ஒரு வேளை விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு 24ஆம் தேதி ஆரம்பிக்கப்படவில்லை என்றால் நாம் குட் பேட் அக்லி திரைப்படத்தை ஆரம்பித்து விடலாம் என்று கூறியிருக்கிறாராம்.

இதையும் படிங்க: எஸ்டிஆருக்கு பத்து தல!.. கூல் சுரேஷுக்கு சொட்டை தல!.. இர்பான் அந்த தலையில என்ன பண்றாரு பாருங்க!..

அதனால் விடா முயற்சிபடத்தின் கடைசி ஷெட்யூல் இதுவாகத்தான் இருக்கும். 24 ஆம் தேதி படப்பிடிப்பு ஆரம்பித்தால் மட்டுமே விடாமுயற்சி திரைப்படம் இந்த தீபாவளி அன்று ரிலீஸ் ஆகும். கொஞ்சம் தாமதம் ஆனாலும் கண்டிப்பாக தீபாவளி அன்று விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸ் ஆகாது என தனஞ்செயன் இந்த தகவலை பகிர்ந்து இருக்கிறார்.

Rohini

Recent Posts

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

9 hours ago

நான் நன்றாக தமிழ் பேச காரணமே சீமான்தான் – எல்ஐகே நாயகி கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…

10 hours ago

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

15 hours ago

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

17 hours ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

18 hours ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

20 hours ago