சமீபகாலமாக சூப்பர் ஸ்டார் குறித்த விவாதங்கள் பல மேடைகளில் முன்வைக்கப்படுகின்றன. இந்த நிலையில் திரையரங்க உரிமையாளர் திருப்பூர் சுப்பிரமணியனும் சமீபத்தில் ஒரு பேட்டியில் சூப்பர் ஸ்டார் பிரச்சினை குறித்து பேசியிருந்தார்.
அவர் கூறும் போது வெறும் வசூலை வைத்து மட்டும் ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று யாரும் சொல்வதில்லை என்றும் பஞ்சு அருணாச்சலமும் ஏவிஎம்மும் இணைந்து ரஜினியை வைத்து ஏராளமான படங்களை எடுத்திருக்கின்றனர் என்றும் அந்த படங்கள் எல்லாமே எந்தளவுக்கு வரவேற்பை பெற்றது என்றும் அதனால் தான் அவர் இன்று வரை சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார் என்றும் கூறினார்.
இதையும் படிங்க : அக்டோபர் 19க்கு முன்னாடி மொத்த லியோ படமும் ரிலீஸ் ஆகிடும் போல!.. அந்த விஷயத்தால் அப்செட்டான லோகேஷ்!..
மேலும் ஏவிஎம் நிறுவனம் ரஜினியை வைத்து ஒரு படத்தை எடுக்கும் போது அந்தப் படத்திற்காக அதிக சம்பளம் கொடுத்தார்களாம். ஆனால் ரஜினியோ சம்பளம் அதிகமாக இருக்கிறது என வாங்க மறுத்து விட்டாராம். இப்ப உள்ள நடிகர்கள் யாரும் அதை செய்ய சொல்லுங்கள் பார்ப்போம் என்றும் திருப்பூர் சுப்பிரமணியன் கூறினார்.
அதுமட்டுமில்லாமல் ரஜினி நடிக்கும் படங்களில் பெரும்பாலும் தயாரிப்பாளர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் நஷ்டம் ஏற்பட்டுவிடக் கூடாது என்றுதான் நினைப்பார். அப்படியே ஏற்பட்டாலும் அதை எப்படியோ ரஜினியே சரி செய்து விடுவார் என்றும் கூறினார்.
ஆனால் இப்ப உள்ள நடிகர்கள் ஒரு வேளை வெற்றி என்றால் தன் வெற்றியாகவும் தோல்வி என்றால் அது தயாரிப்பாளரின் தோல்விதான் என்றும் கருதுகின்றனர். இன்னும் ஒரு படி மேலாக அந்தப் படம் தோல்வியில் முடிந்தால் மீண்டும் அந்த தயாரிப்பாளர் பக்கமே தலையை காட்டமாட்டார்கள் என்றும் கூறினார்.
இதையும் படிங்க : அட்லீ பேச்சக்கேட்டு அனிருத்த போட்டு வீணா போச்சி!.. தலையில் கைவைத்த ஷாருக்கான்…
மேலும் வளரும் தலைமுறை நடிகர்கள் ஒரு தயாரிப்பாளருக்கு தொடர்ந்து நான்கு படங்களில் நடித்துக் கொடுங்கள். அதில் ஒரு இரண்டு படமாவது ஹிட் ஆகும். இப்படித்தான் செய்ய வேண்டும் என்றும் அறிவுரை கூறினார்.
மேலும் இத சொல்றதுனாலேயே என்னை ரஜினியின் சொம்பு தூக்கி என்று சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். ஆமாம் நாம் செம்பு தூக்கிதான். ரஜினி நம்ம தமிழ் சினிமாவை வாழ வைக்கிறார். அதனால்தான் செம்புதூக்கியாக இருக்கிறேன். இப்ப உள்ள நடிகர்களும் சினிமாவை வாழ வையுங்கள், உங்களுக்கும் செம்பு தூக்கியாக இருக்கிறேன் என்று திருப்பூர் சுப்பிரமணியன் கூறினார்.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…