Connect with us
jawan

Cinema News

அட்லீ பேச்சக்கேட்டு அனிருத்த போட்டு வீணா போச்சி!.. தலையில் கைவைத்த ஷாருக்கான்…

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கி ஷங்கரின் உதவியாளர் அட்லீ. ராஜாராணி படம் மூலம் இயக்குனராக மாறினார். மௌன ராகம் படத்தை உல்டா செய்து எடுத்த அந்த படம் வெற்றி பெற்றது. அடுத்து விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கினார்.

ஷங்கரை போலவே சொன்ன பட்ஜெட்டுக்கும் மேல் அதிக பட்ஜெட்டில் படமெடுத்து தயாரிப்பாளரின் வயிற்றில் புளியை கரைக்கும் இயக்குனர் இவர். விஜயை வைத்து 3 படம் இயக்கிவிட்டதால் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இவரின் இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டார். அப்படி உருவான திரைப்படம்தான் ஜவான்.

இதையும் படிங்க: எவ்ளோ முடியுமோ என்னை யூஸ் பண்ணிட்டு இப்ப ஒதுக்கிட்டாங்க!.. விரக்தியில் புலம்பும் டிடி….

ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் இப்படம் உருவானது. இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மேலும், இப்படத்திற்கு அனிருத்தை இசையமைக்க வைத்தார் அட்லீ. 3 வருடங்களுக்கும் மேல் இப்படம் உருவானது. இப்படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

ஆனால், சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல் வீடியோ எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தமிழில் மட்டுமில்லை. ஹிந்தியிலும் அனிருத்தின் இசை செல்ப் எடுக்கவில்லை. இது ஷாருக்கான் அப்செட் ஆகியுள்ளாராம். இப்படம் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகவுள்ளது.

இதையும் படிங்க: விஜய், அஜித்தை ஓரங்கட்டி ரியல் ஸ்டாராக நிற்கும் ஷாரூக்கான்! ‘ஜவான்’ படத்தால் நிகழப்போகும் அதிசயம்

பாடல்கள் ஊத்திக்கொண்ட நிலையில் படத்திற்கு அதிகப்படியான புரமோஷன் செய்வது என ஷாருக்கான் முடிவெடுத்துள்ளாராம் எனவே, தமிழில் விஜய் சேதுபதியை வைத்து புரமோஷன் செய்ய திட்டமிட்டுள்ளாரம். இதற்கு ஒரு புரமோஷன் வீடியோவும் சமீபத்தில் எடுக்கப்பட்டது.

அனிருத் இசை தமிழில் செட் ஆகலாம். ஆனால், ஹிந்தியில் வொர்க் அவுட் ஆகவில்லை. இது இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கே நடந்துள்ளது. அவரின் பாடல்கள் தமிழ் மற்றும் ஹிந்தியில் ஹிட் அடித்தது. ஆனால், தெலுங்கில் வொர்க் அவுட் ஆகவில்லை. இதுவே அனிருத்துக்கும் நடந்துள்ளது. மொத்தத்தில் அட்லியின் பேச்சைக்கேட்டு அனிருத்தை போட்டு இப்படி ஆகிப்போச்சே என ஷாருக்கான் புலம்பி வருகிறாராம்.

இதையும் படிங்க: ஹீரோயினோட சேலையை உருவி!.. அப்படியே பெட்ல தூக்கிப் போடுவேன்!.. அந்த சீன் பற்றி பேசிய மன்சூர் அலி கான்!..

google news
Continue Reading

More in Cinema News

To Top