Connect with us
yuvan

Cinema News

தொழில்ல போட்டி இருக்கவேண்டியதுதான்! குடும்பத்துலயுமா? பாகுபாடு காட்டும் இளையராஜா

தமிழ் சினிமாவில் இசையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியவர் இசைஞானி இளையராஜா. அன்னக்கிளி படத்தின் மூலம் அறிமுகமான இளையராஜா கிட்டத்தட்ட 4 சதாப்தங்களாக தன்னுடைய பயணத்தை கொண்டு சென்று கொண்டிருக்கிறார். எந்த ஒரு இசை பின்னனியும் இல்லாமல் கச்சேரியில் இசையமைத்துக் கொண்டு இருந்த இளையராஜா இந்த அளவு உயரத்தை அடைந்திருப்பது யாரும் எட்டமுடியாத வளர்ச்சியாகும்.

எத்தனை எத்தனை விருதுகள், பெருமைகள் என ஒரு தனி ஆளாக சாதித்துக் கொண்டிருக்கும் இளையராஜாவின் மனதில் அவருடைய இசையின் வாரிசாக அவருடைய மூத்த மகனான கார்த்திக் ராஜாவைத்தான் கொண்டு வரவேண்டும் என்ற ஆசை இருந்ததாம். மேலும் சின்ன வயதில் இருந்தே கார்த்திக் ராஜா மீதுதான் இளையராஜாவிற்கு அதிக அன்பு இருந்ததாம்.

இதையும் படிங்க : யோவ் ரஜினி நீ அந்த கதையில நடிச்சாலும் படம் ஹிட்டாகும்… கடுப்பில் கமெண்ட் அடித்த பாரதிராஜா..

yuvan1

yuvan1

யுவன் சங்கர் ராஜா அம்மா செல்லமாம். இதை பல மேடைகளில் இளையராஜாவே பதிவு செய்திருப்பார். அதுமட்டுமில்லாமல் விஜயகாந்த் நடித்த அலெக்ஸாண்டர் திரைப்படத்திற்கு கார்த்திக் ராஜாதான் இசையமைத்திருப்பார். அப்பொழுது கூட சில சர்ச்சைகள் எழுந்ததாம். அதாவது இளையராஜா நோட்ஸ் கொடுத்து தான் கார்த்திக் ராஜா இசையமைத்தார் என்று விமர்சனங்கள் எழுந்ததாம்.

ஆனால் கார்த்திக் ராஜாவின் இசையில் பல ஹிட் படங்கள் வெளியாகின. ஆனால் ஏதோ ஒரு வித காரணத்தால் அவரால் சினிமாவில் ஜொலிக்க முடியவில்லை. ஆனால் இந்தப் பக்கம் யுவன் சங்கர் ராஜா பேக் டூ பேக் ஹிட் கொடுத்துக் கொண்டே வருகிறார். மேலும் யுவனின் இசையில் வேறெந்த ஒரு இசையமைப்பாளரின் சாயலும் இருக்காது. ஏன் அவரின் தந்தை இளையராஜாவின் சாயலும் இருக்காது.

இதையும் படிங்க : போலீஸ் கொடுத்த வார்னிங்!.. ஒரே மிரட்டலில் உண்மையை உளறிய ரட்சிதா!. இதெல்லாம் தேவையா?!..

yuvan2

yuvan2

அவரின் பழக்க வழக்கங்களிலும் சரி பழகும் விதத்திலும் சரி இளையராஜாவுக்கு எதிர்மறையாக இருப்பார். பல மேடைகளில் இளையராஜாவும் யுவன் சங்கர் ராஜாவும் ஒன்றாக இசையமைக்கும் போது கூட யுவன் சங்கரை குறைத்து மதிப்பிடுவதை போலவே இளையராஜா நடந்து கொள்வார். பெற்ற பிள்ளைகளிடம் ஏன் இந்த பாகுபாடு என ஏராளமானோர் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். என்ன இருந்தாலும் இசையில் நான் தான் எப்பொழுதும் ராஜா என்றே வாழ்ந்து கொண்டிருக்கிறார் இளையராஜா. இந்த சுவாரஸ்ய தகவலை செய்யாறு பாலு கூறினார்.

இதையும் படிங்க : ஜெயலலிதாவை டென்சன் செய்த விஜய்!.. அப்ப ஸ்டார்ட் ஆச்சி!.. இப்ப வொர்க் அவுட் ஆகுமா?!..

google news
Continue Reading

More in Cinema News

To Top