Cinema History
ரஹ்மான்கிட்டயே போ!.. இனிமே என்கிட்ட வராத!. பாடகியிடம் கத்திய இளையராஜா…
தமிழ் சினிமாவில் மண் வாசனை மிக்க பல பாடல்களை கொடுத்தவர் இளையராஜா. இவர் இசையமைக்க துவங்கிய பின்னர்தான் ஆடியோ கேசட்டுகள் அதிகமாக விற்க துவங்கியது. 80களில் பல திரைப்படங்களை தனது இசையால் ஓட வைத்தவர். பல மொக்கை படங்களையும் தனது இசையால் வெற்றிப்படமாக மாற்றிவிடும் வித்தை தெரிந்தவராக இளையாராஜா இருந்தார்.
இதன் காரணமாக சினிமாவை காப்பாற்ற வந்த கடவுளாக இளையராஜா பார்க்கப்பட்டார். அதேநேரம் அவரின் முன் கோபம், ஈகோ இதெல்லாம் திரையுலகினருக்கு பிடிக்கவில்லை. ஆனாலும், அவரை விட்டால் வேறு வழியில்லை என்பதால் அமைதியாக இருந்தனர். அதேநேரம், ஏ.ஆர்.ரகுமான், தேவா உள்ளிட்ட சில இசையமைப்பாளர்கள் வந்ததும் பலரும் அவர்களின் பக்கம் சென்றனர். இதனால் இளையராஜா இசையமைக்கும் படங்களின் எண்ணிக்கை குறைந்தது.
இதையும் படிங்க: இரவில் செக்யூரிட்டி.. பகலில் ஆபிஸ் பாய்!.. படாதபாடு பட்ட பாண்டிராஜ்…
இளையாராஜாவுக்கு மிகப்பெரிய போட்டியாக வந்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். ரஹ்மான் கொடுத்த புதிய ஒலியில், அந்த இசையில் ரசிகர்கள் மயங்கி போனார்கள். அவருக்கு என ரசிகர் கூட்டமும் உருவானது. ஒருபக்கம் தேவாவும் பல படங்களுக்கு இசையமைக்க துவங்கினார். இதனால் இளையராஜாவின் மவுசு கொஞ்சம் குறைந்தது. இளையராஜாவிடம் பல பாடல்களை பாடியவர் பாடகி மின்மினி. ஆனால், ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமான ரோஜா படத்தில் அவர் பாடிய ‘சின்ன சின்ன ஆசை’ பாடல் பட்டிதொட்டியெங்கும் பாடியது.
இது ராஜாவுக்கு பிடிக்கவில்லை. அதன்பின் அவர் மினிமினிக்கு வாய்ப்பே கொடுக்கவில்லை. ஒரு பாடலுக்கு வாய்ப்பு கொடுத்து அவர் பாடி கொண்டிருந்த போது ரிக்கார்டிங் தியேட்டரில் எல்லோருக்கும் முன்பும் அவரிடம் ‘நீ அங்கயே போய் பாடு. இனிமே என்கிட்ட வாராத’ என இளையராஜா கத்தினாராம். அதன்பின் அவர் மின்மினிக்கு பாடலே கொடுக்கவில்லை. இதை மின்மினியே ஒரு சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குடும்ப பெண் இப்படியா நடந்துக்கொள்வது? மேடையில் கணவரை அடித்த தேவயானி!