Cinema History
நீங்க மாலை போட்டா நாங்க சாமி படமா எடுப்போம்?!. இளையராஜாவை காலாய்த்த பாக்கியராஜ்!..
இயக்குனர்களுக்கும், இசையமைப்பாளர்களுக்கும் இடையே சுமூகமான உறவு இருந்தால் மட்டுமே ஒரு படத்திற்கான நல்ல பாடல்கள் பிறக்கும். ஒரு இயக்குனரின் சிந்தனை, அதற்கேற்ப இசையமைப்பாளர் போடும் மெட்டு, அந்த சூழ்நிலைக்கு தேவையான பாடல் வரிகள் இது அனைத்தும் ஒரு நேர்க்கோட்டில் வரவேண்டும்.
80களில் தமிழ் சினிமாவில் இசையில் கலக்கியவர் இளையராஜா எனில் கதை, திரைக்கதை, இயக்கத்தில் கலக்கியவர் கே.பாக்கியராஜ். அது என்னவோ துவக்கம் முதலே இளையராஜாவுக்கும் அவருக்கும் செட் ஆகவில்லை. பாக்கியராஜின் படங்களுக்கு இளையராஜா தொடர்ந்து இசையமைக்கவே இல்லை. இளையராஜா, கங்கை அமரன், சங்கர் கணேஷ், சந்திர போஸ் என அவரின் படங்களுக்கு பலரும் இசையமைத்துள்ளனர். அவ்வளவு ஏன்? பாக்கியராஜே அவரின் இது நம்ம ஆளு படத்திற்கு இசையும் அமைத்தார்.
இதையும் படிங்க: காக்க வைத்து கடுப்பாக்கிய பாக்கியராஜ்!.. கோபத்தில் வாலி சொன்னது என்ன தெரியுமா?!..
அப்போது இருந்த இயக்குனர்கள் போல் தனது படங்களுக்கு இளையராஜா மட்டுமே இசையமைக்க வேண்டும் என பாக்கியராஜ் நினைத்ததே இல்லை. பாக்கியராஜ் இயக்கி நடித்த மௌன கீதங்கள் படத்திற்கு இசையமைத்தது கூட கங்கை அமரன்தான். இது இளையராஜாவுக்கு கோபத்தையும் ஏற்படுத்தியது.
ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் பாக்கியராஜ் இயக்கிய முந்தானை முடிச்சி படத்திற்கு கூட சந்திரபோஸ்தான் பாக்கியராஜின் சாய்ஸாக இருந்தது. ஆனால், இந்த கதைக்கு இளையராஜா இருந்தால் மட்டுமே மக்களிடம் ரீச் ஆகும் என ஏவிஎம் நிறுவனம் சொல்லிவிட்டதால் பாக்கியராஜ் ஒப்புக்கொண்டார்.
இதையும் படிங்க: எழுதும்போது தப்பாச்சி.. அதுவே அவருக்கு பேர் ஆச்சி!.. கவுண்டமணி பெயர் வர காரணமாக இருந்த பாக்கியராஜ்..
இந்நிலையில், ஒரு சினிமா விழாவில் பேசிய பாக்கியராஜ் ‘முந்தானை முடிச்சி படத்தின் டைட்டில் பாட்டுக்காக ராஜாவிடம் போயிருந்தேன். ‘விளக்கு வச்ச நேரத்துல மாமன் வந்தான்.. மயங்கி நின்னு பார்க்கையிலே தாகம் என்றான்’ என எழுதி இருந்தேன். ‘என்ன இப்படி வரிகளை எழுதி இருக்கிறீர்கள்.. நான் பாட மாட்டேன்’ என்றார். ஏன் என கேட்டபோது ‘நான் மாலை போட்டிருக்கிறேன்’ என சொன்னார்.
‘உங்களை யார் மாலை போட சொன்னது?’ என நான் கேட்டேன். ‘என்னை நீங்க என்ன கேட்குறது?’ என கோபப்பட்டார். ‘ஒன்று மாலையை கழட்டிட்டு மியூசிக் போடுங்க. இல்லனா உள்ள மறச்சிக்கோங்க. நாங்க சினிமா எடுக்கிறோம் எங்களுக்கு என்ன தேவையோ அதை கொடுங்க’ என அவரிடம் சண்டை போட்டேன். ஒருவழியா ஒத்துக்கிட்டு அந்த பாட்டை பாடினார். தாகம் என்றான் என பாடாமல் ‘தானன்னா’ என பாடினார். அது வரியை விட நல்லா இருக்கு என அதையே வைத்துவிட்டேன்’ என பாக்கியராஜ் சொல்லி இருந்தார்.
இதையும் படிங்க: ரஜினியோடு நேரடியாக போட்டி போட்ட பாக்கியராஜ் படங்கள்… அட இந்த படமும் லிஸ்ட்ல இருக்கா!…