Cinema History
குணா படத்தில் இளையராஜா செய்த மேஜிக்!.. ஷாக் கொடுத்த சந்தானபாரதி!.. இதெல்லாம் நம்பவே முடியலயே!..
திரையுலகில் எப்போதும் வித்தியாசமான முயற்சிகளை செய்து வருபவர் கமல்ஹாசன். அப்படி ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் அவர் நடித்த திரைப்படம்தான் குணா. 1991ம் வருடம் வெளியான இந்த திரைப்படத்தை கமலின் நண்பர் சந்தானபாரதி இயக்கியிருந்தார். இந்த படத்தில் இனிமையான பாடல்களை இசைஞானி இளையராஜா கொடுத்திருந்தார்.
ஆனால், இந்த படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெறவில்லை. எனவே, வசூல்ரீதியாக இது வெற்றிப்படமாக அமையவில்லை. ஆனல், கமல் ரசிகர்களுக்கு எப்போதும் பிடித்த ஒரு படமாகவே குணா படம் இருக்கிறது. இந்த படத்தில் இடம் பெற்ற ‘கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே’ பாடல் இசை ரசிகர்களால் எப்போதும் ரசிக்கும் பாடலாகவே இருக்கிறது.
இதையும் படிங்க: மாஸ் ஹிட் திரைப்படங்களை மிஸ் செய்து மொக்கையான நடிகர் ஸ்ரீகாந்த்… இதெல்லாம் காஸ்ட்லி மிஸ்ல…
மேலும் உன்னை நான் அறிவேன் மற்றும் அப்பனென்றும் அம்மையென்றும் போன்ற பாடல்களும் பலராலும் இப்போதும் ரசிக்கப்பட்டு வருகிறது. இந்த படத்திற்காக கொடைக்கானலில் இருந்த ஒரு குகையில் படப்பிடிப்பை நடத்தினார்கள். அதன்பின் அந்த இடத்திற்கு குணா குகை என பெயர் வந்தது. அது சுற்றுலாத்தளமாகவும் மாறியது.
சமீபத்தில் கூட நண்பர்கள் 10 பேர் சேர்ந்து அந்த குகைக்கு செல்வது போல ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ என்கிற மலையாள படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அந்த படக்குழுவினரை நேரில் அழைத்து கமலும் பாராட்டியிருந்தார். சென்னை போன்ற சிட்டிகளில் இப்படத்திற்கு நிறைய டிக்கெட்டுகள் விற்பனை ஆகி வருகிறது.
இதையும் படிங்க: குணா குகைக்காக கஷ்டப்பட்ட கமல்… ஒரே விசிட்டில் ஈஸியான ஐடியாவை பிடித்த மஞ்சுமெல் பாய்ஸ்!
இந்நிலையில், குணா படத்தை இயக்கிய சந்தானபாரதி அப்படம் பற்றிய பல தகவல்களை ஊடகம் ஒன்றில் பகிர்ந்து கொண்டார். இந்த படத்தில் இடம் பெற்ற ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடல் சில நிமிடங்களில் முடிந்துவிட்டது. இதுதான் சூழ்நிலை என நான் சொன்னதும் இளையராஜா டியூன் போட வாலி உடனே பாடல்களை எழுதிவிட்டார்.
குணா படத்திற்கான மொத்த இசையையுமே ராஜா 2 மணி நேரத்தில் முடித்துவிட்டார். காலை 8 மணிக்கு அவரிடம் போனோம். 2 மணி நேரத்தில் 4 பாடல்களை போட்டு கொடுத்துவிட்டார். 10 மணிக்கு வீட்டிக்கு போய்விட்டோம்’ என அவர் சொல்லி இருக்கிறார். இப்போதெல்லாம் யுவன் சங்கர் ராஜா, அனிருத் போன்ற இசையமைப்பாளர்கள் ஒரு பாட்டுக்கே பல நாட்கள் எடுத்துக்கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உங்க பாட்டு பிடிக்கல!.. ஆனா தலைப்பு கிடைச்சிடுச்சி!.. கண்ணதாசனை டீலில் விட்ட கமல்ஹாசன்!..