Connect with us
kannadasan

Cinema History

உங்க பாட்டு பிடிக்கல!.. ஆனா தலைப்பு கிடைச்சிடுச்சி!.. கண்ணதாசனை டீலில் விட்ட கமல்ஹாசன்!..

கதாசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர், நடிகர், தயாரிப்பாளர் என 60களில் திரையுலகை கலக்கியவர் கவிஞர் கண்ணதாசன். சில சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆர் படங்களில் கதை, வசனம் எழுதியிருக்கிறார். எம்.ஜி.ஆர் முதன் முதலாக தயாரித்து, இயக்கி நடித்த நாடோடி மன்னன் படத்தில் வசனம் எழுதியவர் கண்ணதாசன்தான்.

அதேபோல், கண்ணதாசன் வசனம் எழுதிய முதல் படமான ‘இல்லற ஜோதி’யில் ஹீரோவாக நடித்தவர் சிவாஜி கணேசன். அதன்பின் சிவாஜியின் சில படங்களுக்கு கண்ணதாசன் வசனம் எழுதியிருக்கிறார். ஆனால், கதாசிரியர், வசனகர்த்தா, நடிகர், தயாரிப்பாளர் என்பதையெல்லாம் விட பாடலாசிரியராகத்தான் கண்ணதாசன் அதிகம் பிரபலமானார்.

இதையும் படிங்க: பாட்டு எழுத 20 பைசாவை கொடுத்த தயாரிப்பாளர்!.. கண்ணதாசன் வாழ்வில் நடந்த செம காமெடி!..

காதல், தத்துவம் என கண்ணதாசன் எழுதி பாடல் வரிகள் சாகா வரம் பெற்றவை. அவரின் பாடல்கள் இப்போதும் காற்றில் எங்கோ ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. படத்தில் வரும் எந்த மாதிரியான சூழ்நிலைக்கும் பாடல்களை எழுதிவிடுவார். அதனால்தான். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட 60களில் முக்கிய நடிகர்களின் படங்களில் அவரை பாடல்களை எழுத வைத்தனர்.

எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோர் ஹீரோவாக நடிப்பது குறைந்து போன காலகட்டத்தில்தான் ரஜினி, கமல் என்ட்ரி திரையுலகில் நடந்தது. எம்.ஜி.ஆர் – சிவாஜி போலவே ரஜினி – கமலுக்கும் நிறைய பாடல்களை கண்ணதாசன் எழுதியிருக்கிறார். ஆனால், வைரமுத்து, வாலி போன்ற பல பாடலாசியர்கள் அவருக்கு போட்டியாக இருந்ததால் அவர் பாடல் எழுதும் எண்ணிக்கை குறைந்து போனது.

கமல்ஹாசன் முதன் முதலில் தயாரித்து, நடித்த திரைப்படம் ராஜ பார்வை. இந்த படத்தில் கண் பார்வை அற்றவராக கமல் நடித்திருப்பார். இது அவரின் 100வது படமும் கூட. இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக மாதவி நடித்திருப்பார். சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கிய இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.

இதையும் படிங்க: வாலி எழுதிய பாடலை கண்ணதாசன் என நினைத்து பாராட்டிய பிரபலம்!. எம்ஜிஆர் சொன்னது இதுதான்!..

இந்த படத்தில் ஒரு பாடலை பாட கண்ணதாசன் வரவழைக்கப்பட்டார். ராஜபார்வை எந்தன் பக்கமே என வரிகளை எழுதினார். ஆனால், அந்த பாடல் வரி கமலுக்கு பிடிக்கவில்லை. ஆனால், அவர் எழுதிய வரியிலிருந்த ராஜபார்வை என்கிற வார்த்தை அவருக்கு பிடித்துவிட்டது கண்ணதாசனிடம் ‘பாட்டு பிடிக்கவில்லை. ஆனால், எனக்கு தலைப்பு கிடைத்துவிட்டது’ என சொன்னாராம் கமல்.

rajaparvai

 

அதன்பின் ராஜபார்வை படத்தில் இடம் பெற்ற ‘அழகோ அழகு’ பாடலை கண்ணதாசன் எழுதினார். மேலும், வாலி, வைரமுத்து ஆகியோரும் பாடல்களை எழுதினார்கள். இப்படத்தில் வைரமுத்து எழுதிய ‘அந்திமழை பொழுகிறது’ பாடல் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

இதையும் படிங்க: வாலிக்காக வரிகளை மாற்ற சொன்ன எம்.ஜி.ஆர்!.. கடுப்பாகி கத்திய கண்ணதாசன்!.. நடந்தது இதுதான்!..

google news
Continue Reading

More in Cinema History

To Top