சாப்பாடு வர லேட்!. கடுப்பில் இளையராஜா போட்ட 13 பாடல்கள்!.. அட அந்த படமா?..

by சிவா |
சாப்பாடு வர லேட்!. கடுப்பில் இளையராஜா போட்ட 13 பாடல்கள்!.. அட அந்த படமா?..
X

ilayaraja

"இசை" என்றால் இளையராஜாதான் என்று சொல்லும் வானளாவிய புகழுக்கு சொந்தக்காரர். இவரது இசையை, பாடல்களை விரும்பாதவர்கள் எண்ணிக்கையில் சொற்பமே. நிமிடத்தில் பாடல்களை உருவாக்கி கொடுக்கும் வல்லலமையை பெற்றவர். இவர் இசையமைத்த "சின்னத்தம்பி" படத்தின் பாடல்கள் உருவானதன் பின்னணி குறித்த சுவரசியத்தை உடைக்கிறார் இயக்குனர் ஜான் மகேந்திரன். இவர் இயக்குனர் மகேந்திரன் மகன். விஜயை வைத்து சச்சின் என்கிற படத்தை இயக்கியவர்.

இளையராஜாவின் இசையால் தான் ஈர்க்கப்பட்டதாக சொல்லும் இவர் பள்ளிக்கு சென்ற நாட்களை விட பிரசாத் ஸ்டுடியோவிற்கு சென்றதே அதிகம் என பெருமை பொங்க கூறியிருந்தார். எங்கு சென்றாலும் அவருடன் காரில் அழைத்து செல்லுவாராம் இளையராஜா. அந்த அளவில் தன் மீது பாசத்தை காட்டியவர் என்றும் அவர்களது மகனை போலவே தன்னை நினைத்தார் என தனது மகிழ்வையும் கூறியிருகிறார்.

இதையும் படிங்க: இளையராஜாவை பத்தி உங்களுக்கு என்ன தெரியும்? அவரு எப்படிப்பட்ட ஆள் தெரியுமா? வெடித்த பிரபலம்…

அப்படி இருக்கையில் ஒரு நாள் பாடல் "கம்போசிங்" நடக்க அவர்களுக்கு வர வேண்டிய மதிய உணவு வர தாமதமானதாம். அதனால் எரிச்சல் அடைந்த இளையராஜா தனது உதவியாளரிடம் இயக்குனரை வரச்சொல்லியிருக்கிறார். அந்த இடைவேளை நேரத்தில் வரிசையாக பதிமூன்று மெட்டுக்களை போட்டுக்கொடுத்தாராம்.

இதுதான் படத்திற்கான 'டியூன்' என்று கூறியதோடு ஆழியாரோ, அமெரிக்காவோ எங்கிருந்து இசை அமைத்தாலும் இந்த படத்திற்கு இசை இதுதான் என சிரித்தவாரே சொல்லியிருந்தாராம், உணவு இடைவேளையில் அவர் போட்டுக்கொடுத்த "டியூன்"களே பிரபு, குஷ்பூ நடிப்பில் வெளிவந்து மெஹா ஹிட் ஆன "சின்னத்தம்பி" பட்த்தின் பாடல்களாக இறுதி செய்யப்பட்டதாம்.

இதையும் படிங்க: ரோஜா படத்துக்கு ரஹ்மானுக்கு தேசிய விருது!.. இளையராஜா ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?…

அவரின் இந்த ஆற்றல் தம்மை அசரவைத்ததாக தெரிவித்திருக்கிறார் ஜான் மகேந்திரன். கேரளாவில் ஒரு இசை நிகழ்ச்சியில் இளையராஜா பாடல்களை பாடிக்கொண்டிருந்தாராம். அப்பொழுது "நாயகன்" படத்தில் வரும் 'நிலா அது வானத்தின் மேலே' பாடலை அவர் பாட அங்கிருந்த இளைஞர் கூட்டம் உற்சாகம் தாளாமல் குடும்பத்துடன் முன்வரிசையில் அமர்ந்திருந்த ரசிகர்களுக்கு இடையூறு செய்யும் விதமாக அமைந்ததாம் .

இதை பாடியவாரே கவனித்த இளையராஜா உற்சாகமான அந்த பாடலின் மெட்டினை மாற்றி அவர்களுக்கு தொந்தரவு செய்ய வேண்டாம் என செய்கையின் மூலமாகவே காட்ட, அவர் சொன்னது படி ரசிகர்களும் யாருக்கும் இடைஞ்சல் இல்லாதபடிநிகழ்ச்சியை ஆடி, பாடி மகிழ்ந்தனராம்.

இதையும் படிங்க: இளையராஜாவோட உண்மை கதையை அப்படியே எடுத்தா அவ்வளவுதான்!.. பகீர் கிளப்பும் பிரபலம்!..

Next Story